மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காருக்கு புதிய கவுரவம் கிடைத்த நிகழ்வை ஆனந்த் மஹிந்திரா பெருமிதத்துடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மொசாம்பிக் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவரது பயணத்திற்காக மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பெருமிதத்துடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மொசாம்பிக்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவில் பயணம மேற்கொண்டுள்ளார். இந்த தருணம் எங்கள் எல்லோருக்கும் பெருமிதத்தையும், கவுரவத்தையும் தருகிறது. எங்களது மொசாம்பிக் நாட்டு டீலர் இந்த பெருமையை தேடித் தந்துள்ளார். நீங்கள் எப்போதும் நல்லதை செய்தால், உயர்ந்து கொண்டே இருக்கலாம்," என்று ட்விட்டரில் படங்கள் மற்றும் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

அதாவது, மஹிந்திரா ரைஸ் என்ற தனது நிறுவனத்தின் கொள்கை குரலை இணைத்து இந்த ட்வீட்டை செய்துள்ளார். சிறந்த தயாரிப்புகளை வழங்குவதையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மொசாம்பிக் நாட்டில் மஹிந்திரா டீலரை நிர்வகித்து வருபவர் கேரளாவை சேர்ந்த ஜோஸ் என்ற தொழிலதிபர். போப் ஆண்டவர் பயணத்திற்கு மஹிந்திரா கேயூவி100 வாகனத்தை வழங்கியதும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதும் ஜோஸ் என்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்டுள்ள மற்றொரு ட்விட்டில்," ஏற்கனவே இதுபோன்ற கவுரவத்தை மஹிந்திரா பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 1964ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய போப் ஆண்டவர் மஹிந்திராவின் கூரை இல்லாத திறந்த ஜீப்பில் பயணித்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார்.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மேலும், அந்த வரலாற்று சிறப்புமிக்க மஹிந்திரா ஜீப் தற்போது கண்டிவிலியில் உள்ள மஹிந்திரா மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதையும் தெரிவித்துள்ளார். இதனால், தற்போது இரண்டாவது முறையாக போப் ஆண்டவர் மஹிந்திரா காரில் பயணித்த நிகழ்வு நடந்துள்ளது.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியானது இந்தியாவின் மிக குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. போப் ஆண்டவர் இதுபோன்ற சிறிய வாகனங்களில் பயணிப்பதை விரும்புவதாக அந்த டீலர் தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சமே, 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. அதாவது, முன் இருக்கையில் மூன்று பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியில் 82 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 77 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி விரைவில் எலெக்ட்ரிக் கார் மாடலிலும் வர இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த புதிய கவுரவம்... ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

இந்தியாவில் ரூ. 4.96 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில் சிறந்த பட்ஜெட் கார் மாடல்களில் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Anand Mahindra, Chairman, Mahindra Group, recently took to Twitter to post photos and videos of His Holiness Pope Francis travelling in his company car. He tweeted out photos and a video, showcasing the Pope traveling at the back of a Mahindra KUV100 in Mozambique, Africa.
Story first published: Saturday, September 7, 2019, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X