போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடலின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கார் குறித்த பல முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

தனித்துவமான டிசைன், அசத்தும் செயல்திறனுடைய ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வாடிக்கையாளர் மனதில் சிம்மாசனம் போட்டுள்ளது போர்ஷே கார் நிறுவனம். இந்த நிலையில், எதிர்கால சந்தையை மனதில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

போர்ஷே டைகன் என்ற எலெக்ட்ரிக் காரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. வழக்கம்போல் தனது பெட்ரோல் கார்களை போலவே, இந்த எலெக்ட்ரிக் கார் செயல்திறனில் அசத்தலாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தோதுவான விலையில் வழங்கும் விதத்தில், டைகன் எலெக்ட்ரிக் காரின் குறைவான செயல்திறன் கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

போர்ஷே டைகன் 4எஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இந்த மாடலிலும் ஆக்சிலுக்கு தலா ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் வீதம் இரண்டு மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

போர்ஷே டைகன் 4எஸ் மாடலில் 19 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்ஷே நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் போர்ஷே 4டி சேஸீஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

புதிய போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. குறைவான விலையுடைய வேரியண்ட்டில் 79.2kWh பேட்டரியும், அதிக விலையுடைய மாடலில் 93.4 kWh திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்படும். இவை ஏற்கனவே இருக்கும் டர்போ மற்றும் டர்போ எஸ் மாடல்களிலிருந்தே எடுத்து இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

இதன் 93.4kWh திறன் வாய்ந்த பேட்டரி மாடலானது முறையே, அதிகபட்சமாக 523 பிஎச்பி பவரையும், 563 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு மாடல்களுமே 0 - 100 கிமீ வேகத்தை 4.0 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. இந்த காருக்கு 800V டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 22.5 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

குறைவான திறன் கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 407 கிமீ தூரம் வரையிலும், செயல்திறன் மிக்க பேட்டரி மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 463 கிமீ தூரம் வரையிலும் பயண தூரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

அமெரிக்காவில் போர்ஷே டைகன் 4எஸ் ஸ்டான்டர்டு மாடலானது 1,03,800 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.74 லட்சம்) விலையிலும், 93.4kWh பேட்டரி மாடலுக்கு 1,10,380 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.79 லட்சம்)விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் போர்ஷே டைகன் டர்போ வேரியண்ட் 1,50,900 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.07 கோடி) விலையிலும், டர்போ எஸ் வேரியண்ட் 1,85,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.32 கோடி) விலையிலும் கிடைத்து வருகின்றன.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche has introduced a new affordable model of the Taycan called the 4S.
Story first published: Tuesday, October 15, 2019, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X