கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று கொண்டுள்ள கும்பமேளா விழாவில், சாது ஒருவருக்கு மிகவும் விலை உயர்ந்த பரிசு கிடைத்துள்ளது. அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமம் என வர்ணிக்கப்படும் கும்பமேளா விழா, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் (தற்போது பிரயக் ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), கடந்த 15ம் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 4ம் தேதி வரை, கும்பமேளா விழா நடைபெறவுள்ளது.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

மிகவும் பிரசித்தி பெற்ற கும்பமேளாவில் நீராடுவதற்காக, பக்தர்கள் மற்றும் நாக சாதுக்கள், பிரயக் ராஜ் நகரில் குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வருவதால், பிரயக் ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, கும்பமேளா விழாவை நடத்துவதற்காக சுமார் 4,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த சூழலில் தற்போது கும்பமேளா விழாவில் கலந்து கொண்டுள்ள ஒரு சில நாக சாதுக்கள், அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகின்றனர். சாதாரண மக்களை போல், அவர்களும் ஹை டெக்காக மாறியிருப்பதே இதற்கு காரணம். ஆம், தற்போது நாக சாதுக்களும் மாடர்னாக மாறி விட்டனர்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

நாக சாதுக்கள் சிலர் பைக், கார் ஆகிய வாகனங்களில் உலா வருவதுடன், செல்போன்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் ''ஹீரோ பாபா'' முக்கியமானவர். இவரது இயற்பெயர் மகத்தேஸ்வர் பூரி. ஆனால் மக்கள் இவரை ஹீரோ பாபா என்றுதான் அழைக்கின்றனர்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்தியாவை சேர்ந்த உலகின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் (Hero Glamour) மோட்டார் சைக்கிளை அவர் பயன்படுத்தி வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஹீரோ கிளாமர் மட்டுமின்றி வேறு பல மோட்டார் சைக்கிள்களையும் நான் ஓட்டியுள்ளேன் என ஹீரோ பாபா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இவராவது பரவாயில்லை. பைக்கில்தான் வலம் வருகிறார். ஆனால் மற்றொரு சாது, கெத்தாக காரில் உலா வந்து கொண்டுள்ளார்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அதுவும் அவர் பயன்படுத்தி கொண்டிருப்பது சாதாரண கார் அல்ல. மஹிந்திரா நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றாக திகழும் ஸ்கார்பியோ காரைதான் (Mahindra Scorpio) அவர் உபயோகிக்கிறார். இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்றும் அடங்கியுள்ளது.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பக்தர் ஒருவர்தான் அந்த சாதுவிற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ காரை வழங்கியுள்ளார். தற்போது அந்த காரின் மீது அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார் அந்த சாது. இதுகுறித்து அவர் கூறுகையில், ''காலத்துடன் ஒன்றி வாழ வேண்டும்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

வாழ்க்கை பயணத்தில் எவையெல்லாம் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என் பக்தர் ஒருவர் எனக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ காரை வழங்கினார். எனவே அந்த காரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

MOST READ: கப்பலின் 11வது மாடியில் இருந்து கடலில் குதித்த பயணி: வீடியோ

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

கார் எதுவரை செல்கிறதோ, அதுவரை நான் பயன்படுத்தி கொள்வேன். அதன் பிறகு கால்களால் நடக்க தொடங்கி விடுவேன்'' என்றார். இன்னும் சில சாதுக்கள் ஆப்பிள் ஐபோன், சாம்சங் கேலக்ஸி உள்ளிட்ட மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

நாக சாதுக்கள் மாடர்னாக மாறி, பைக், கார் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருவது குறித்து, நியூஸ் 18 தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சூழலில் ஹீரோ பாபா பயன்படுத்தி வரும் ஹீரோ கிளாமர் மோட்டார் சைக்கிள், ஹீரோ நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றாகும். இதில், 124.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில், 11.40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஹீரோ கிளாமர் பைக், 61.32 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.61,900 முதல் ரூ.66,400 வரையிலான விலையில், ஹீரோ கிளாமர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதனிடையே மற்றொரு சாது பயன்படுத்தி வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் குறித்த அறிமுகமே தேவையில்லை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக ஸ்கார்பியோ திகழ்ந்து கொண்டுள்ளது.

MOST READ: விஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இது எஸ்யூவி (SUV-Sport Utility Vehicle) வகையை சேர்ந்த கார் ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மொத்தம் 9 வேரியண்ட்கள் மற்றும் 4 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பேர்ல் ஒயிட், நபோலி பிளாக், மோல்டன் ரெட், டிசட் சில்வர் ஆகியவைதான் அந்த 4 வண்ணங்கள்.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளை கடந்தும் கூட, விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது ஸ்கார்பியோ. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஸ்கார்பியோ கார் விற்பனை செய்யப்படுகிறது.

கும்பமேளாவில் சாதுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு... என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஐரோப்பிய நாடுகளில் மஹிந்திரா கோவா (Mahindra Goa) என்ற பெயரிலும், ரஷ்யாவில் மஹிந்திரா மார்ஷல் (Mahindra Marshal) என்ற பெயரிலும் ஸ்கார்பியோ கார் விற்பனையாகிறது. இந்தியாவில் ரூ.10.15-ரூ.16.59 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் ஸ்கார்பியோ விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

English summary
Prayagraj Kumbh Mela 2019: Sadhus With Bikes, Cars And New-Age Technology. Read in Tamil
Story first published: Tuesday, January 22, 2019, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more