பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... யாருகிட்டயும் சொல்லீராதீங்க...

பிரதமர் மோடி புதிய கார் ஒன்றை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். எனவே அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக முக்கியமான நபர் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த அதிநவீன கார்களைதான் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக உருவெடுத்தபோது, பதவியேற்பு விழாவிற்கு வர கவச மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தினார். குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலும், தேர்தல் பிரசாங்களிலும் இதே காரைதான் மோடி உபயோகித்தார். இதன்பின் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை நரேந்திர மோடி பயன்படுத்த தொடங்கினார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இதுதான் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ கார். இதன் பிறகு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல் காரையும் பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த காரில் பிரதமர் நரேந்திர மோடி வலம் வருவதை நம்மால் காண முடிந்தது. இதன்பின் பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரையும் மோடி பயன்படுத்தினார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இவ்வாறு தற்போது வரை பல்வேறு கார்களை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவரது அதிகாரப்பூர்வ காரான பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை தற்போதைய நாட்களில் அவரது கான்வாயில் காண்பது என்பது அரிதாக உள்ளது. இந்த சூழலில் புதிய கார் ஒன்றை பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருடன் பிரதமர் மோடியை தற்போது நம்மால் பார்க்க முடிந்துள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்று விட்டு இந்தியா திரும்பினார். அவரது வருகையை சில செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதில், லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் மோடி ஏறுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று உள்ளது. இது இதற்கு முன்பாக மோடி பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கிடையாது. அது பழைய தலைமுறை கார். இது லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ஆகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.70 கோடி ரூபாய். இதன் ஆன் ரோடு விலை சுமார் 2 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

MOST READ: தரமான சம்பவம்... ஒரு பைக்கின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான ரியல் ஹீரோ... என்ன செய்தார் தெரியுமா?

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இங்கே குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயமும் உள்ளது. இது ரெகுலர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் இல்லை. இந்தியாவின் மிக முக்கியமான நபர் ஒருவரை சுமந்து செல்லும் கார் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த கவச காராக இது மாற்றப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ போல் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கவச வாகனங்களை வழங்குவதில்லை.

MOST READ: பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம்... போலீஸை அலற விட்ட பாசக்கார தந்தை...

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

எனவே வெளியில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, கவச காராக மாற்றப்பட்டிருக்கலாம். இது பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் என்பதால், இதற்கு ஆன செலவு எவ்வளவு என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 4.5 லிட்டர் வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: தல, தளபதி படங்களின் எதிர்பார்ப்பை ஓவர்டேக் செய்த எம்ஜி எலெக்ட்ரிக் கார்! இந்த புதிய தகவல்தான் காரணம்

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 262 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. மோடி போன்ற நபர்களுக்கு இதுபோன்ற கார்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமரின் புதிய கார் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prime Minister Narendra Modi’s New Latest-generation Toyota Land Cruiser. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X