சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

பிஎஸ்ஏ குழுமம் முதலாவதாக அட்டகாசமான எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

இந்திய கார் சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம். மேலும், தனது அங்கமாக செயல்படும் சிட்ரோவன் கார் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதையும் உறுதி செய்தது.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

இந்த சூழலில், முதலாவதாக எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலுடன் இந்திய சந்தையில் பிஎஸ்ஏ குழுமம் வர்த்தகத்தை துவங்க இருப்பதாக கார்அண்ட்பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

அண்மையில் சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த நிலையில், சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை முதலாவதாக இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

கடந்த ஆண்டுதான் புதிய சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலானது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. ஓசூரில் அண்மையில் திறக்கப்பட்ட ஆலையிலிருந்து எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் போன்ற முக்கிய பாகங்கள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்படும். பிற முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்படும்.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

புதிய சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்ஏ குழுமம் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் தற்போது உற்பத்தி செய்து வருகிறது. இந்த எஞ்சினை பயன்படுத்துமா என்பது தெரிய வில்லை. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற இருக்கிறது.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

இந்த எஸ்யூவியில் 12.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 20 விதமான நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெற முடியும்.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

இந்த எஸ்யூவி 4,500 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இந்த புதிய எஸ்யூவி போட்டி போடும் என்று தெரிகிறது. சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை தொடர்ந்து சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவியையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது பிஎஸ்ஏ குழுமம்.

சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

புதிய சிட்ரோவன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி காம்பேக்ட் ரக மாடலாக இருக்கும்.. இந்த எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஆனால், இந்த எஸ்யூவி 4 மீட்டருக்கும் சற்றே கூடுதல் நீளத்தை பெற்றிருக்கிறது. ஆம், 4,154 மிமீ நீளம் கொண்டதாக இருப்பதால் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கும் போட்டியாக வருகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன்
English summary
PSA Group's First Car In India Will Be An SUV Model.
Story first published: Monday, March 4, 2019, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X