இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

குவாட்ரி சைக்கிள் ரகத்திலான க்யூட்டை மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வாடகை ஆட்டோவாக பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

பைக் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பஜாஜ் நிறுவனம், அண்மையில் க்யூட் என்ற மைக்ரோ ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் தோற்றம் மிகவும் சிறியதாகவும், அதனுடைய எஞ்ஜின் ஆட்டோவுக்கு இணையானதாக இருப்பதாலும் இதனை பலர் பலவிதமான பெயர்களில் அழைத்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

சிறிய கார் ரகத்தில் காட்சியளிக்கும் இந்த க்யூட், இயல்பாக குவாட்ரி சைக்கிள் மாடலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய எஞ்ஜின் ஆட்டோ ரிக்ஷாவில் இடம் பெறுவதைப் போன்று பின் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குவாட்ரி சைக்கிளை பஜாஜ் நிறுவனம் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அண்மையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

இந்நிலையில், மும்பையில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் இந்த க்யூட்டை, கமர்சியல் பயன்பாட்டிற்காக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், அதனை அவர் வாடகை ரிக்ஷாவாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

இதனால், இந்த க்யூட் இந்தியாவில் பயன்படுத்தப்படும் முதல் வாடகை குவாட்ரிசைக்கிள் என்ற புகழைச் சூடியுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவில் இதுபோன்று நான்கு சக்கரங்களைக் கொண்ட குவாட்ரி சைக்கிள், வாடகைக்காக பயன்படுத்தியது இல்லை என்பது கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

பஜாஜின் இந்த குவாட்ரிசைக்கிள் ரகத்திலான க்யூட், முன்னதாகவே பல சர்வேதச நாடுகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில விதிமுறைகள் காரணமாக, குவாட்ரி சைக்கிளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவி வந்தது. ஆகையால், விதிமுறைகளுக்கு ஏற்ப க்யூட்டை பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்தது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

இதனால், பஜாஜ் க்யூட்டின் உள்நாட்டு விற்பனைக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆகையால், இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து க்யூட் விற்பனையில் இருந்து வருகின்றது. முக்கியமாக கமர்சியல் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் வகையில்தான் இந்த க்யூட்டை பஜாஜ் நிறுவனம் உருவாக்கியது. ஆனால், தனிநபர் பயன்பாட்டிற்கும் இந்த க்யூட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

அதிலும், முக்கியமாக மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷாக்களின் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில் இந்த குவாட்ரி சைக்கள் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் க்யூட் தயாராகி இருக்கின்றது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

இந்நிலையில், பஜாஜின் முதல் வாடகை க்யூட் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த வீடியோவ மிட்டே இந்தியா என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

வீடியோவில் இருக்கும் க்யூட், வாடகை பயன்பாட்டிற்கு ஏற்ப சில மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், புதிய க்யூட்டிற்கு கருப்பு, மஞ்சள் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, இந்த க்யூட்டிற்கு டேக்ஸி லுக்கை வழங்குகிறது. இந்த க்யூட்டை மும்பையைச் சேர்ந்த புபேந்த்ரா பாத் என்பவர் தான் இவ்வாறு மாற்றம் செய்துள்ளார்.

வீடியோவில் காட்சியளிக்கும் புபேந்த்ரா க்யூட் குறித்த சில தகவலை நமக்கு வழங்குகிறார். அதில், அவர் க்யூட்டை வாங்கியது குறித்து பேசுகிறார். மேலும், வாடிக்கையாளர்கள் சிலரும் வாடகை க்யூட் குறித்த தகவலை பகிர்வதை நம்மால் இந்த வீடியோவில் காண முடிகிறது. அவர்கள் க்யூட்டை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் இந்த க்யூட் சிஎன்ஜி வேரியண்டிடலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது ரூ. 2.78 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது. இது ரெகுலர் வேரியண்டைக் காட்டிலும் 30 ஆயிரம் அதிகம் ஆகும்.

பஜாஜின் இந்த க்யூட்டில் பவர்-ஸ்டியரிங், ஏசி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இதில் அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், 5 ஸ்பீடு மேனுவர் சீக்குவென்சியல் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த க்யூட்டின் பவருக்காக, 216சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட், 4-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

இது அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும்,18.9 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. அதேபோன்று, சிஎன்ஜி வேரியண்டில் 10 பிஎச்பி மற்றும் 16 என்எம் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், இதில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் வாடகை குவாட்ரி சைக்கிள் இதுதான்... வீடியோ...!

பஜாஜின் இந்த க்யூட் தற்போது கேரளா, ஒடிசா, ராஜஸ்தான், உபி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவின் ஆறு முக்கிய மாநிலங்களில் க்யூட்டை விற்பனைக்கு முயற்சியில் பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் க்யூட்டை விற்பனையில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Qute Operating As A Taxi In Mumbai. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X