வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

அரசு பேருந்து ஒன்று திடீரென வாய்க்காலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் நீங்கள் பயணம் செய்யவே மாட்டீர்கள்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

முன்பொரு காலத்தில் அரசு போக்குவரத்து சேவையில் தமிழகம்தான் இந்தியாவிலேயே தலை சிறந்து விளங்கியது. குக்கிராமங்களுக்கு கூட தரமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலை கீழாக மாறி விட்டது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

தமிழக அரசு பேருந்துகளின் தரம் தற்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. தமிழக அரசாங்கத்தால் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை, உடைசல்களாகதான் உள்ளன. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

பயணிகளின் சேவைக்கு தமிழக அரசு காலாவதியான பேருந்துகளை அதிகளவில் இயக்கி கொண்டுள்ளது. முறையாக பராமரிக்கப்படாத இப்படிப்பட்ட அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதன் காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

தமிழக அரசு பேருந்துகளின் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏராளமான பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

திடீரென ஏற்படும் பிரேக் ஃபெயிலியர் போன்ற காரணங்களால்தான் தமிழக அரசு பேருந்துகள் அதிகம் விபத்தில் சிக்குகின்றன. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைதான் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில், தமிழகத்தை போல், மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகள்தான் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கோட்டா நோக்கி, நேற்று காலை (பிப்.5) பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

ராஜஸ்தான் மாநில அரசுக்கு சொந்தமான இப்பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாக்சு என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, அங்கிருந்த வாய்க்காலில் எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்தது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

இதனால் பயணிகள் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், படகுகள் மூலம் சென்று பயணிகளை மீட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. என்றாலும் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

இதன்பின்பு பஸ்ஸை மீட்கும் பணிகள் நடந்தன. படகுகள் மற்றும் கிரேன்கள் ஆகியவற்றின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து பேருந்து மீட்கப்பட்டது. இதனிடையே விபத்திற்குள்ளான பேருந்து முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து நடைபெற்ற சாக்சு என்ற இடத்திற்கு அருகே உள்ள பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த பேருந்து திடீரென வாய்க்காலில் கவிழந்துள்ளது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

திடீரென ஏற்பட்ட பிரேக் ஃபெயிலியர் காரணமாகவே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பேருந்து வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக உள்ளூர் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

பொருளாதார ரீதியில் இந்தியா அளவிற்கு வளர்ச்சியடையாத நாடுகளில் கூட உலகத்தரம் வாய்ந்த அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இன்னும் ஓட்டை, உடைசலான மற்றும் முறையாக பராமரிக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ள அரசு பேருந்துகள்தான் இயக்கப்பட்டு வருகின்றன.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதால், அரசு பேருந்துகளில் பயணம் செய்யவே பயணிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவும் கூட பலர் தனியார் பேருந்துகளை நாடி செல்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனியார் நிறுவனங்களுக்கு செல்கிறது. எனவே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வருவாயை அதிகரிக்கவும் அரசு பேருந்துகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

விபத்துக்களை குறைக்க வேண்டுமானால், தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகள் பராமரிக்கப்பட வேண்டும். டெப்போவில் இருந்து பேருந்து புறப்படுவதற்கு முன்பாக, பிரேக் உள்பட அனைத்து உபகரணங்களும் சரியாக இயங்குகின்றனவா? என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

இந்த சோதனையை தினசரி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலமாக என்னென்ன பழுதுகள் உள்ளன? என்பதை அறிந்து கொள்ளலாம். பின்னர் பயணிகளின் பாதுகாப்பிற்காக அந்த பழுது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

பழுது உடனடியாக சரி செய்யப்பட்டால், பேருந்து மேற்கொண்டு சேதமடைவதையும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பேருந்து ஓட்டுனர்களின் பணி நேரத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும்.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

சில சமயங்களில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஓட்டுனர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்படுகிறது. இதனால் இரவு, பகல் பாராமல், உறக்கம் இல்லாமல் அவர்கள் பேருந்துகளை இயக்குகின்றனர். இதுவும் கூட விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... காரணம் தெரிந்தால் இனி அரசு பேருந்துகளில் பயணிக்கவே மாட்டீர்கள்...

எனவே டிரைவர்களின் பணி நேரத்தை வரைமுறைப்படுத்துவதுடன், அவர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். இத்தகைய வழிமுறைகளை அரசு பின்பற்றினால் விபத்துக்களின் எண்ணிக்கை குறையும். இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.

Image Source: NewsFlare

Most Read Articles
English summary
Rajasthan Government Bus Falls Into Drain, 6 Injured. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X