உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

இந்தியாவின் பெரும்பாலான கார் நிறுவன கார்களில் வரும் லெதர் சீட்கள் நீண்ட காலம் தரமாய் இருக்கும் மற்றும் சொகுசான பயணத்தை தரும் என மக்களிடைய கருத்து உள்ளது. ஆனால் லெதர் சீட்டில் உள்ள சிக்கல்கள் குறித்து மக்கள் உணர தவறுகின்றனர். லெதர் சீட்டில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

பொதுவாக மக்கள் புதிய கார் வாங்கும்போது முக்கியமாக பார்க்கும் விஷயங்களில் ஒன்று சீட்கள் லெதர் சீட்களா? இல்லையா? என்பது தான். இதன் காரணம் லெதர் சீட்கள் நீண்ட காலம் தரமாய் இருக்கும் மற்றும் சொகுசான பயணத்தை தரும் என மக்களிடைய பொதுவான கருத்து உள்ளது. உண்மையில் காரில் லெதர் சீட்கள் உபயோகிப்பதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

லெதர் சீட்களில் வரும் நறுமணம் உண்மையில் லெதரின் வாசனை கிடையாது. லெதர் தயாரிப்பில் லெதரில் வரும் துர்நாற்றத்தை மறைக்க லெதரினை சென்ட் கலவையில் ஊறவைத்த பின்னரே அதனை பேக் செய்வார்கள். மேலும் சென்ட்டின் வாசனை வெளியில் செல்லாமல் இருக்கும் அளவிற்கு பேக்கிங் செய்வார்கள். இதனால் மட்டுமே லெதர் சீட்களில் நறுமணம் வீசுகிறது.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

ஆரம்ப காலங்களில் நறுமணம் வீசினாலும் காலப்போக்கில் லெதர் சீட்களில் துர்நாற்றம் வீச துவங்கி விடும். காரினை தினமும் பராமரித்து சுத்தமாக வைத்தாலும் லெதர் சீட்கள் நாளுக்குநாள் மங்கி வாசனை வீச ஆரம்பித்துவிடும். மீண்டும் புதிய லெதர் சீட்டினை தேடி செல்ல அது வழிவகுக்கும் இதன் காரணமாகவே சில நிறுவனங்கள் மட்டமான லெதர் சீட்களை தயாரிக்கின்றனர்.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

இதுபோல லெதர் சீட்கள் என கூறப்படும் பெரும்பாலான சீட்களில் உண்மையானா லெதர் பயன்படுத்துவது கிடையாது. போலியாக தயாரிக்கபடும் செயற்கை லெதர்களே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக சில கார் நிறுவனங்கள் உன்மையான லெதர் சீட்கள்தான் தருகிறார்கள் என்றால் எக்ஸ்டெண்டட் லெதர் சீட்கள் இருக்கும் கார்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது ஏன்? என யோசித்து பாருங்கள்.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

போலியான லெதர் சீட்டினால் உங்கள் பணம் வீணாக விரயமாகிறது. மேலும் சீட்களில் உண்மையான லெதர் இருந்தாலும் சில வருடங்கள் கழித்து சீட்கள் மங்கும் நிலையில் அது வெள்ளை படித்து சீட்கள் தோற்றத்தை கெடுத்துவிடும். மேலும் சில போலி லெதர் சீட்களில் அதன் லெதர் உதிர்ந்து சீட்க்ளில் அழுக்கான தோற்றத்தை ஏற்படுத்தும். கார்கள் வெளியே புதியது போல இருந்தாலும் சீட்கள் மங்கினாள் இன்டிரியர் பழையது போன்று தோன்றும்.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

லெதர் சீட்களில் தொலைவான தூரம் அமர்ந்து பயணம் செய்வோர்க்கு அசவுகரியமான சூழலை உருவாக்கும். இது அதிகமான சூட்டினை கிளப்பும் என்பதால் தூர பயணங்களில் ஓட்டுநர் அல்லது பயணிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். மேலும் லெதர் சீட்கள் அதிகம் சூடாகும்போது ஒருவிதமான துர்நாற்றத்தை காரினுள் ஏற்படுத்தும் எனவே லெதர் சீட்கள் உள்ள காரில் பயணம் செய்யும்போது ஆங்காங்கே ஓய்வு எடுப்பது நல்லது.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

லெதர் சீட்கள் கிளைமேட்டிற்கு ஏற்றவாறு மாறிவிடும் இது பெறிய சிக்கலாகும், உதரணமாக கோடை காலங்களில் மிகவும் சூடாகவும், குளிர் காலங்களில் மிகவும் குளிராகவும் இருக்கும். பொதுவாக வெப்பம் மற்றும் குளிரினை லெதர் உள்வாங்கிக்கொள்ளும் என்பதால் அது சீட்களை காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறது. பொதுவாக மற்ற சீட்களை விட லெதர் சீட்களில் வெப்பம் மற்றும் குளிர்ச்சி அதிகமாகவே காணப்படும்.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

கார்களின் எண்ணிகை அதிகரித்து வரும் சூழலில் லெதர் சீட்கள் அதிகரித்தல் அது விலங்குகளுக்கும், சுற்றுசூழலுக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும். லெதர் ஆடு, மாடு மற்றும் எருமை போன்ற விலங்குகளின் தோல்களின் மூலம் செய்யப்படுகிறது. லெதர் பொருட்களை செய்ய பற்பல விலங்குகள் கொல்லப்படுகிறது எனவே லெதர் சீட்களை மக்கள் உபயோகிப்பதை குறைப்பதன் மூலம் விலங்குகளை பாதுகாக்கலாம்.

உங்கள் காரில் லெதர் சீட்களை வைக்காதீர்கள்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

இந்த காரணங்கள் அனைத்தும் லெதர் சீட்களை கார்களில் வைப்பதால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலாகும் எனவே லெதர் சீட்கள் அல்லாமல் மற்ற சீட்கள் உபயோகியுங்கள். ரேஞ் ரோவர், ஃபோர்டு போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் எஸ்யூவி கார்களில் லெதர் சீட் பயன்படுத்துவதை குறைத்து வருகிறது. சுற்றுசூழலை பாதுகாக்கவும், விலங்குகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும் அந்நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதுபோல சுற்றுசூழலுக்கு கேடு இல்லாத சீட்கள் உள்ள காரினை வாங்குவது சிறந்தது.

Most Read Articles
English summary
Reasons You Should Never Get Leather Seats in Your Car: Read More in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X