மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

மலிவு விலை ட்ரைபர் எம்பிவி ரக காரால் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக ரெனால்ட் மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரெனால்ட், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்ரைபர் என்ற புத்தம் புதிய எம்பிவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்த கார் அறிமுகமானதில் இருந்து ரெனால்ட் நிறுவனத்திற்கு ஜாக்பாட் அடித்ததைப் போன்ற புது யோகம் கிடைத்துள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

ஏனென்றால், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், தனது சொந்த நிறுவன தயாரிப்புகளான க்விட், டஸ்டர் போன்ற மாடல்களை விற்பனையில் பின்னுக்குத் தள்ளி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாடல்கள் அனைத்தும் ட்ரைபர் அறிமுகமாவதற்கு முன்பு வரை அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்தன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

ஆனால், அந்த நிலை அப்படியே தலைகீழாகா மாறியுள்ளது. இதுமட்டுமின்றி, மேலும் ஓர் சிறப்பான இடத்தையும் ரெனால்ட் நிறுவனத்திற்கு ட்ரைபர் பெற்று தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தை ரெனால்ட் நிறுவனத்திற்கு ட்ரைபர் பெற்று தந்துள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் ரெனால்ட் ட்ரைபர் மாடலின் 10,800 க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கு புக்கிங் குவிந்தது. இது கடந்த மாத விற்பனையைக் காட்டிலும் 76.1 சதவீதம் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த திடீர் உயர்விற்கு ட்ரைபர் மட்டுமின்றி க்விட் மாடலும் ஓர் காரணமாக உள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

ஆகையால், ரெனால்ட் நிறுவனத்தின் இந்த வெற்றி பயணத்திற்கு ட்ரைபர் மட்டுமில்லாமல் க்விட் காரும் தன் சார்பாக ஓர் முக்கிய பங்கினை அளித்துள்ளது.

அதேசமயம், ரெனால்டின் மற்ற மாடல்களின் விற்பனையைப் பார்த்தோமேயானால், அவை தற்போது வரை மந்த நிலையையேச் சந்தித்து வருகின்றன. புதிய விற்பனை விகிதத்தால் டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்களையே ரெனால்ட் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

தற்போது, அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் கியா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. இதில், ட்ரைபர் எம்பிவி அறிமுகத்தால் இந்நிறுவனங்களின் வரிசையில் ரெனால்டும் இணைந்துள்ளது.

ட்ரைபர் மாடலின் இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், அதன் மலிவு விலை மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளே காரணியாக உள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

ரெனோ ட்ரைபர் காரின் விலையைப் பார்த்தோமேயானால், ஆரம்பநிலை வேரியண்டிற்கு ரூ. 4.95 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே டாப் எண்ட் மாடலுக்கு ரூ. 6.49 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

7 இருக்கைகளைக் கொண்ட கார், இந்த விலையில் கிடைப்பது மிகப் பெரிய போட்டியைச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாகவே, தற்போது ரெனால்ட் நிறுவனம் தனி சிறப்புப் பெற்றுள்ளது. ஏனென்றால், மற்ற நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரும் இந்த தரத்திலான கார்கள் அதிக விலையைக் கொண்டதாக காட்சியளிக்கின்றன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

விலை மட்டுமின்றி மற்ற அம்சங்களிலும் முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த கார் உள்ளது.

அந்தவகையில், இந்த காரில் மிக முக்கிய அம்சமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காணப்படுகின்றது. இதில் நேவிகேஷன், புஷ் டு டாக், வீடியோ பிளேபேக் வசதி (கார் நிற்கும்போது மட்டும் செயல்படும்), ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

இத்துடன், ட்ரைபர் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான தனி ஏசி வெண்ட்டுகள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று, பாதுகாப்பிற்கான அம்சங்களும் ஏராளாமாக காணப்படுகின்றது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

அந்தவகையில், ட்ரைபரின் டாப் எண்ட் வேரியண்டில் 4 ஏர்பேக்குகளும், இதர வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா (ஆப்ஷனல்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ட்ரைபர் காரில் ஒன்று மட்டும் பெரிய குறையாகவே உள்ளது. அதாவது, 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே ட்ரைபர் கிடைப்பது, வாகன விரும்பிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. எந்த இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Renault Become 5th Largest Car Maker In India: Here Is How? Read In Tamil.
Story first published: Wednesday, December 4, 2019, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X