நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

க்விட் மற்றும் ட்ரைபர் கார்களுக்கு அடுத்து இந்திய மார்க்கெட்டுக்காக ரெனோ கார் நிறுவனம் புத்தம் புதிய மினி எஸ்யூவி மாடலை களமிறக்க உள்ளது. இந்த புதிய கார் HBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய மாடல் இந்திய சாலை நிலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிமாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த நிலையில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியானது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரை போலவே, இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் விலை மிக குறைவாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

மேலும், ட்ரைபர் மற்றும் டஸ்ட்டர் இடையிலான விலையில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி எதிர்பார்க்க்பபடுகிறது. இந்த புதிய எஸ்யூவியானது ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ட்ரைபர் காரின் சேஸீ மற்றும் இதர முக்கிய பாகங்கள் இந்த புதிய எச்பிசி மினி எஸ்யூவி காரில் சிறிய மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படும் நிலையில், இந்த புதிய மாடலில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் க்ளியோ ஹேட்ச்பேக் காரின் இந்த டர்போசார்ஜ்டு எஞ்சின் இந்தியாவில் முதல்முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுக்கு பதிலாக, கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில், சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வர இருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதே மாடலை ரீபேட்ஜ் செய்து டட்சன் பிராண்டிலும் விற்பனைக்கு செய்வதற்கு ரெனோ - நிஸான் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
According to reports, Renault is planning to unveil of its all new Compact SUV at 2020 Auto Expo.
Story first published: Tuesday, October 22, 2019, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X