ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் டீசர் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி சிறந்த தேர்வாக உள்ளது. 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ டஸ்ட்டர் விற்பனையில் ஹிட் அடித்தது. அதேநேரத்தில், இதன் சந்தையை குறிவைத்து அடுத்தடுத்து பல புதிய எஸ்யூவி மாடல்கள் வந்ததால், விற்பனை குறைந்தது.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

வெளிநாடுகளில் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இரண்டாம் தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில், டஸ்ட்டர் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுத்து கூடுதல் சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செசய்ய இருக்கிறது ரெனோ கார் நிறுவனம்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

சில தினங்களுக்கு முன் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது வரும் 8ந் தேதி புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. வலிமையான தோற்றத்தை தரும் புதிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ரூஃப் ரெயில்க்ள், மற்றும் அலாய் வீல்கள் என புதுப்பொலிவு பெற்றுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

மேலும், அசத்தலான புதிய நீல வண்ணத்தில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது. அதாவது, இது தனித்துவமான வண்ணமாக விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளது. முன்புற பம்பர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

ஹெட்லைட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் புதிய விதிமுறைகளுக்கு ஒப்பாக சேர்க்கப்பட்டுள்ளன.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது, டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. எனவே, பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே தொடரும்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். விலை சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
French car maker Renault has confirmed that the new Renault Duster facelift will be launched in India on July 8, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X