என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்!

மலிவு விலையில் களமிறங்கி புரட்சி செய்து வரும் ஹுண்டாய் வெனியூ காருக்கு போட்டியளிக்கும் வகையில் சிறப்பம்சங்கள் மற்றும் விலையைக் கொண்ட புதிய எஸ்யூவி ரக காரை ரெனால்ட் நிறுவனம் தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

பிரெஞ்ச் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தை மையமாகக் கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் தனக்கென நிலவி வரும் சந்தை எதிர்பார்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், அவ்வப்போது புதிய தயாரிப்புகளை அது அறிமுகம் செய்து வருகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

இந்நிலையில், அதன் பிரபல எஸ்யூவி ரக காரான டஸ்டர் மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலை நிறுத்துகின்ற வகையிலான ஓர் காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை லைவ் மின்ட் என்ற ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

ரெனால்ட் நிறுவனம், அதன் முதல் மின்சார காரை வருகின்ற 2022ம் ஆண்டிற்கு பின்னரே இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் மின் வாகனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பூர்த்தியடையாத காரணத்தால், இந்த முடிவை அது எடுத்துள்ளது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

அதுமட்டுமின்றி, லேட்டாக களமிறங்கினாலும் லேட்டஸ்டாக களமிறங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அது செயல்பட்டு வருகின்றது. இதற்காக, மலிவு விலையில் அதிக தூரத்தில் பயணம் செய்யும் மின்சார கார்களை களமிறக்க அது திட்டமிட்டுள்ளது. இத்தகைய செயலால் மட்டுமே வெகஜன மக்களை கவர முடியும் என அது நம்புகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

மத்திய அரசு, உள்நாட்டில் மின் வாகனங்களை பயன்படுத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைக்கும் ஏற்கனவே களமிறங்கிவிட்டது. இதற்காக ஃபேம்-2 திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் கோடி அது ஒதுக்கியுள்ளது. ஆகையால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நாடு முழுவதும் மின் வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கு தேவையான நிலையங்கள் கணிசமான வளர்ச்சியை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

எனவே, ரெனால்ட் நிறுவனத்தின் காத்திருப்பு வீண்போகாது என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரெனால்ட் நிறுவனத்தின் இந்த நிலைப்பாடுகுறித்த தகவலை, அந்நிறுவனத்தின் முதன்மை செயலாக்க அலுவலரான வெங்கட்ராம் மமில்லபல்லே உறுதிப்படுத்தியுள்ளார்.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "இந்தியாவில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களைக் காட்டிலும் கடுமையான போட்டிக் கொடுக்கின்ற வகையிலான விலையில் மின் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டு வருகின்றோம். அதேசமயம், அது சர்வதேச தரத்திற்கு இணையானதாகவும் இருக்கும்" என தெரிவித்தார்.

இந்த காரின் உற்பத்திக்காக பாரிஸில் உள்ள ஓர் குழுவுடன் இணைந்து ரெனால்ட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

மலிவு விலை மின்சார காரைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அனைத்து தர வகுப்பினரையும் கவர்கின்ற வகையிலான காம்பேக்ட் ரக எஸ்யூவி காரையும் தயாரித்து வருகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

அண்மையில்தான், புதுப்பிக்கப்பட்ட க்விட் மற்றும் டிரைபர் எம்பிவி ரக காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தனக்குள்ள சந்தையை மேலும் விரிவாக்கம் செய்து கொள்ளும் விதமாக, சப்-4 மீட்டர் ரகத்திலான புதிய எஸ்யூவி ரக காரை தயாரித்து வருகின்றது. இது, இந்தியாவிற்காக பிரத்யேகமாக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவலையும் மமில்லபல்லே உறுதி செய்துள்ளார்.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

புதிதாக தயாராகி வரும் அந்த காருக்கு எச்பிசி என்ற குறியீட்டு பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. இது, ட்ரைபர் காரின் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படலாம் என தெரிகின்றது.

மேலும், இந்த காரில் 1.0 லிட்டர் எஸ்சிஇ (SCe) டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் இடம்பெற உள்ளது. இது பிஎஸ்-6 தரம் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்மிஷனில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

இந்த காரை ட்ரைபர் எம்பிவி ரக காரைக் காட்டிலும் மலிவு விலையில் களமிறக்கப்பட உள்ளது. இந்த விலைக்குறைப்பிற்காக ஒரு அம்சங்களை நீக்கும் முயற்சியில் ரெனால்ட் நிறுவனம் செய்து வருகின்றது. அதேசமயம், இந்த நடவடிக்கையின் காரணமாக, அந்த காரில் எந்த விதத்திலும் குறைவாக தோன்றாது என ரெனால்ட் தெரிவித்துள்ளது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

ஆகையால், இந்த காரில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்புடன் கூடிய தொடு திரை இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமேண்ட், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்...

இந்த கார் மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, ஹுண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த உள்ளது.

புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை

Most Read Articles
English summary
Renault Electric Vehicle To Be Launched In 2022 Targeted At Mass Market Segment. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X