மாஸ்... குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்

ரெனால்ட் நிறுவனம் குறைவான விலையில் மிரட்டலான கார் ஒன்றை களமிறக்கவுள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ஒன்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மிகவும் முனைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது. டஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரெனால்ட் நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரைபர் காரை ரெனால்ட் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

இதனை தொடர்ந்து க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் ரெனால்ட் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அடுத்த மாதம் லான்ச் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுதவிர சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றையும் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், ஹூண்டாய் வெனியூ மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக ரெனால்ட் நிறுவனம் இந்த காரை களமிறக்கவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த கார் எச்பிசி (HBC) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

இந்த சூழலில் ரெனால்ட் எச்பிசி சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் 2020 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின்னர் கூடிய விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

ட்ரைபர் காரின் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் எச்பிசி காரையும் ரெனால்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரெனால்ட் க்விட் பட்ஜெட் ஹேட்ச்பேக் காரும் இதே பிளாட்பார்மை தழுவிதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் க்விட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாட்பார்மை காட்டிலும் ட்ரைபர் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாட்பார்ம் நீளமானது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ட்ரைபர் மற்றும் எச்பிசி கார்கள் முக்கியமான பாகங்களை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்பிசி காரை ரெனால்ட் நிறுவனம் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அனேகமாக இதுதான் ரெனால்ட் நிறுவனத்தின் மலிவான விலை எஸ்யூவி காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக ரெனால்ட் நிறுவனம் டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எச்பிசி காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை வழங்கவுள்ளது.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

இந்த இன்ஜின் 72 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அனேகமாக இதே இன்ஜின்தான் எச்பிசி காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அதிக பவர் அவுட்புட்டை கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது. ட்ரைபர் காரில் இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

இதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் ரெனால்ட் எச்பிசி காரிலும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ட்ரைபர் காரை போலவே எச்பிசி காரும் இலகுவானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எச்பிசி காரில், ட்வின் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படலாம்.

குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காருக்கு மிக சவாலான விலை நிர்ணயத்தை செய்யவுள்ளது. அனேகமாக இதன் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ட்ரைபர் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் எச்பிசி காரையும் ரெனால்ட் நிறுவனம் மிக சவாலான விலையில்தான் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களால் வாடிக்கையாளர்களின் ஆவல் மேலோங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault HBC Compact SUV Debut Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X