புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜின் அமைப்பை கொண்ட க்விட் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை 2020ல் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் தற்சமயம் இந்த க்விட் ஃபேஸ்லிப்ட் கார் சோதனை ஓட்டங்களில் தீவிரமாக ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

அந்த வகையில் புனேவில் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட இந்த காரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முழுவதும் மறைக்கப்படாமல் முன்புறம் மற்றும் பின்புறம் என ஓரளவு மறைக்கப்பட்ட நிலையில் தான் 2020 க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்தை கணக்கிட சோதனை கருவி என்ஜினிற்கு நேர்எதிராக காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய சோதனை கருவிகள் தற்போதைய மாடலை விட பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் எவ்வளவு மாசுவை உமிழ்கிறது? என்பதை கண்டறிய வழக்கமாக பொருத்தப்படுவை தான்.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

இந்த சோதனை ஓட்ட வீடியோவின் மூலம், விற்பனையாகி வரும் ஹேட்ச்பேக்கில் உள்ள 14-இன்ச் சக்கரங்களுடன் தான் இந்த காரும் உள்ளது தெரிய வருகிறது. அதேபோல் 2020ல் அறிமுகமாகவுள்ள இந்த காரிலும் தற்போதைய க்விட் ஹேட்ச்பேக்கின் மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்படவுள்ளது.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

ஆனால் தற்போது 67 பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட்டில் கூடுதலாக ஆற்றலை வெளியிடும் என தெரிகிறது. ஸ்பை வீடியோவில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டும் மறைக்கப்பட்டுள்ளதால், பம்பர்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. பம்பர் மட்டுமல்லாமல் முன்புற ஹெட்லைட் அமைப்பும் எல்இடி-க்கு அப்டேட் ஆகியுள்ளது.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

தற்சமயம் ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக், 12 வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த 12 வேரியண்ட்களும் இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளன. இந்த தேர்வுகளில் உள்ள 799சிசி என்ஜின் 53 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனையும் 1.0 லிட்டர் என்ஜின் முன்பே கூறியதுபோல, 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

ரூ.2.83 லட்சத்தில் இருந்து ரூ.4.92 லட்சம் வரை விற்கப்பட்டு வரும் ரெனால்ட் க்விட் மாடலின் 2020 ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ரூ.3.25 லட்சத்தில் இருந்து ரூ.5.55 லட்சம் வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

அடுத்த ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த சோதனை ஓட்ட வீடியோவின் மூலம் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளது தெரிகிறது. இதேபோல் உட்புறத்திலும் கண்டிப்பாக சில அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு இருக்கும். சில வெளிநாட்டு சந்தைக்களில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த கார் இதே தரத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid Facelift BS-VI Spotted Testing Ahead Of India Launch: Spy Pics & Video
Story first published: Tuesday, November 19, 2019, 19:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X