வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

இந்திய வாடிக்கையாளர்களின் தலையில், முன்னணி கார் நிறுவனங்கள் இடியை இறக்கியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் (Renault) இந்திய மார்க்கெட்டில் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், குறிப்பிடத்தகுந்த கார் க்விட் (Renault Kwid). இந்தியாவின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) மற்றும் டட்சன் ரெடிகோ (Datsun RediGo) உள்ளிட்ட மாடல்களுடன் ரெனால்ட் க்விட் போட்டியிட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

ரெனால்ட் நிறுவனத்தின் சிஎம்எஃப்-ஏ (CMF-A) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள க்விட் கார், மார்க்கெட்டில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் தற்போது வரை மொத்தம் 2.75 லட்சம் க்விட் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் க்விட் காரின் 2019 வெர்ஷனை களத்தில் இறக்கியது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

அப்டேட் செய்யப்பட்ட 2019 க்விட் காரில், எலெக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உடனான ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS with EBD), டிரைவர் ஏர்பேக், டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

ஆனால் விலை உயர்த்தப்படவில்லை. க்விட் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 2.66 லட்ச ரூபாய். அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 4.6 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். 2019 ரெனால்ட் க்விட் காரானது, பாரத் புதிய வாகனங்கள் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்ட விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

பிஎன்விஎஸ்ஏபி எனப்படும் (BNVSAP- Bharat New Vehicles Safety Assessment Program) மிக கடுமையான பாரத் புதிய வாகனங்கள் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்ட விதிமுறைகள் இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இதற்கு ஏற்ப அனைத்து கார் நிறுவனங்களும் தங்கள் மாடல்களில் மாற்றங்களை செய்து வருகின்றன. 2019 ரெனால்ட் க்விட் காரும் அதனடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

ரெனால்ட் க்விட் காரானது 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 800 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் இதைக்காட்டிலும் பெரிய 1.0 லிட்டர் இன்ஜினானது அதிகபட்சமாக 68 பிஎச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

ரெனால்ட் க்விட் காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ஆரம்பத்தில் புகழ்பெற்ற மாடலாக திகழ்ந்தாலும், கடந்த சில மாதங்களாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், க்விட் காரின் விலையை உயர்த்த உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

இதன்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ரெனால்ட் க்விட் காரின் விலை 3 சதவீதம் வரை உயர்கிறது. ஆனால் க்விட் காரின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ஒரே மாதிரியாக 3 சதவீதம் வரை உயர்கிறதா? அல்லது வேரியண்ட்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடுமா? என்பதை ரெனால்ட் நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

3 சதவீதம் வரையிலான விலை உயர்வு என்பதால், க்விட் காரின் பேஸ் வேரியண்ட் விலை சுமார் ரூ.9 ஆயிரமும், டாப் வேரியண்ட்டின் விலை ரூ.12 ஆயிரமும் உயரவுள்ளது. பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக க்விட் இருந்து வருகிறது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...

முன்னதாக டொயோட்டா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் உள்ளிட்ட கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவன கார் மாடல்களின் விலையும் வரும் ஏப்ரல் மாதம் முதல்தான் உயர்த்தப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Announces Price Hike For Kwid Hatchback — Prices To Increase From April-2019
Story first published: Monday, March 25, 2019, 21:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X