வெறும் ரூ. 2.83 லட்சம்தான்: நானோவிற்கு அடுத்த மலிவு விலை ரெனோ கார்... ஆனால் அதீத திறனுடையது!

ரெனால்ட் நிறுவனம், அதன் அனைத்து க்விட் புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

பிரெஞ்ச் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனோ, அதன் அனைத்து புதுப்பிக்கப்பட்ட க்விட் ஹேட்ச்பேக் ரக கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே, இந்த காரின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் ஸ்பை படங்கள் வெளியாகிருந்தன. அவை, ஹேட்ச்பேக் ரக கார் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டியது.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

இந்நிலையில், இந்த கார் இன்று (செவ்வாய்கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியர்கள் மத்தியில் நிலவி வந்த ஆவலை சற்று தணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதேசமயம், தற்போது புதிய தூண்டுதலை இந்த காரின் அறிமுகம் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், புதிய ஹேட்ச்பேக் ரக க்விட் கார் மிக மலிவான விலையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

அந்தவகையில், புதிய க்விட் காரின் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 2,83,290 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்த காரின் ஹை எண்ட் மாடலுக்கு ரூ. 4,84,490 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

க்விட் காரின் முழு விலை விவரப் பட்டியல்:

Variant Prices
STD 0.8L Rs 2.83 Lakh
RXE 0.8L Rs 3.53 Lakh
RXL 0.8L Rs 3.83 Lakh
RXT 0.8L Rs 4.13 Lakh
RXT 1.0L Rs 4.33 Lakh
RXT 1.0L EASY-R Rs 4.63 Lakh
CLIMBER MT Rs 4.54 Lakh
CLIMBER EASY-R Rs 4.84 Lakh
வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

இந்த காரின் விலை மலிவானதாக இருந்தாலும், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் க்விட் காருக்கு எஸ்யூவி ரக கார்களின் டிசைன் தாத்பரியங்களை மையமாகக் கொண்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை காரின் ஸ்டைல் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களைப் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

அதற்கேற்ப வகையில், காரின் முகப்பு பகுதி மின் விளக்குகள் சற்று தாழ்வாக நிறுவப்பட்டுள்ளது. மேலும், மேல்பக்கத்தில் முதல் தரத்திலான சில்வர் ஸ்ட்ரீக் எல்இடி பகல்நேர மின் விளக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது, க்விட் காருக்கு விலையுயர்ந்த சொகுசு காரின் லுக்கை வழங்குகின்றது.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

அதேபோன்று, காரின் பின்பக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மின் விளக்குகளும் அசத்தலான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. இவை, முன்பெப்போதும் க்விட் காரில் இடம்பெறாத வசதிகாளா காட்சியளிக்கின்றது.

MOST READ: கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

இதுமட்டுமின்றி, க்விட் காரின் வெளிப்புற தோற்றத்தை கூடுதல் ரம்மியமாக காட்சிப்படுத்தும் வகையில், அதன் உடல்பகுதிக்கு கட்டுமஸ்தான அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை ஹைலைட் செய்து காட்டும் வகையில் அவற்றிற்கு வால்கனோ க்ரே எனப்படும் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: தரமான சம்பவத்தை நிகழ்த்திய மெட்ரோ ரயில் நிர்வாகம்... இனி சென்னை வாசிகள் இதற்காக திண்டாட தேவையில்லை!

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

இத்துடன், பல ஸ்போக்குகள் கொண்ட வீல், எஸ்யூவி கார்களில் இடம்பெறுவது போன்ற பிளேட் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, க்விட் ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இதேபோன்ற பல்வேறு மாற்றங்கள் அதன் உட்புறத்திலும் செய்யப்பட்டுள்ளன.

MOST READ: 8 வயது சிறுவன் பைக் ஓட்டும் வீடியோ வைரல்... தந்தைக்கு கிடைத்த கடும் தண்டனை என்னவென்று தெரியுமா?

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

அந்தவகையில், காரின் கேபினுக்குள் புத்தம் புதிய எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஃப்ளூர் கன்சோல் மவுண்டட் ஏஎம்டி டயல் மற்றும் 20.32 மீடியா என்ஏவி டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இவை, காருக்கு கூடுதல் பிரீமியம் லுக்கை வழங்குகின்றது.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ரெனோ க்விட் கார், தற்போது விற்பனையில் இருக்கும் க்விட் காரைப் போலவே இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஸ்சிஇ (SCe) மோட்டாரில் கிடைக்க உள்ளது.

இவையிரண்டும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கின்றது.

வெறும் ரூ. 2.83 லட்சம்தான்... டாடா நானோவிற்கு அடுத்ததாக மலிவு விலை கொண்ட ரெனோ கார்...

இதில், 0.8 லிட்டர் அளவுடைய எஞ்ஜின் அதிகபட்சமாக 54 பிஎஸ் சக்தியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, 1.0 லிட்டரில் கிடைக்கும் எஞ்ஜின் அதிபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Renault Launches Facelift Kwid Hatchback Car In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X