காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

புத்தம் புதிய காம்பேக்ட் ரக செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெற்றுவிடுவதற்கு அதிரடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. க்விட் காருக்கு கிடைத்திருக்கும் அடையாளத்தையும், பிரபலத்தையும் அடிப்படையாக வைத்தே இந்திய மக்களின் மனதை ஈர்த்துவிடும் வகையில் அந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

அதன்படி, ரெனோ க்விட் கார் அடிப்படையிலான புத்தம் புதிய மினி எம்பிவி ரக காரை வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. ட்ரைபர் என்ற பெயரிலான இந்த மினி எம்பிவி காரில் 7 பேர் செல்வதற்கான இடவசதி இருக்கும் என்பதுடன், குறைவான பட்ஜெட்டில் வர இருப்பது ஆவலை கிளறியுள்ளது.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

இதைத்தொடர்ந்து, க்விட் அடிப்படையிலான மினி எஸ்யூவி காரையும் அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து காம்பேக்ட் ரக செடான் காரையும் களமிறக்கிவிடுவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை பயன்படுத்துவதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், டீசல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படாது என்பதும் உறுதியாகி இருக்கிறது.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல ஜாம்பவான் மாடல்கள் இருக்கும் இந்த மார்க்கெட்டில் வித்தியாசமான டிசைன் அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகளுடன் குறைவான விலையில் அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

இந்த காரும் ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த கார் LBA என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. ஆக மொத்தம் இந்த புதிய மாடல்கள் மூலமாக இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெற்றுவிடுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது.

காம்பேக்ட் செடான் ரக காரை களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டம்!!

இந்த கார்கள் அனைத்துமே ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் வர இருப்பதால், வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக ஆவல் எழுந்துள்ளது. மேலும், க்விட் கார் போலவே நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இந்த கார்களிலும் இடம்பெறும் என்பதுடன், புதிய பாதுகாப்பு தர நிர்ணய விதிகளுக்கு உட்பட்ட அம்சங்களுடன் இருக்கும்.

Source: ACI

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Plans To Launch Compact Sedan In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X