புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

ரெனால்ட் நிறுவனம் புதிய பிரம்மாண்ட கார் ஒன்றை மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம், இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் அந்நிறுவனத்தின் ''க்விட்'' (Renault Kwid) தவிர, வேறு எந்த காரும் இங்கு பெரிய அளவில் விற்பனையாவது கிடையாது. இதனால் இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனம் தத்தளித்து கொண்டுள்ளது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

ஆனால் அடுத்த 2-3 ஆண்டுகளில், கார்கள் விற்பனையை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே தற்போது உள்ள சில மாடல்களை அப்டேட் செய்ய ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. இதுதவிர விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, புதிய கார் மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

இதன்படி க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், சிறிய எஸ்யூவி, சிறிய செடான் மற்றும் 7 சீட்டர் எம்பிவி என மொத்தம் 4 புதிய கார்களை ரெனால்ட் நிறுவனம் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 7 சீட்டர் எம்பிவி ரக கார்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் தற்போதைக்கு ஆர்பிசி (Renault RBC) என்ற இடைக்கால குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் இரண்டாவது எம்பிவி ரக காராக ஆர்பிசி இருக்கும். முன்னதாக லாட்ஜி (Renault Lodgy) என்ற எம்பிவி ரக காரை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், ரெனால்ட் ஆர்பிசி கார், மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரெனால்ட் ஆர்பிசி கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் சோதனை செய்யப்பட்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின. இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில், பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பது தெரியவருகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

Source: HVKForum

ரெனால்ட் ஆர்பிசி காரானது, சப்-4 மீட்டர் எம்பிவி ரகத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அதாவது ரெனால்ட் ஆர்பிசி காரின் நீளம் 4 மீட்டருக்கு உட்பட்டதாகதான் இருக்கும். இதன் மூலம் ஜிஎஸ்டி வரி குறையும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைவான விலையில் காரை வழங்க முடியும்.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில், ரெனால்ட் ஆர்பிசி காரின் விலை வெறும் ரூ.4.5 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார்களை இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி எர்டிகாதான் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

இதற்கு மிக முக்கியமான காரணம் மாருதி சுஸுகி எர்டிகாவின் மலிவான விலைதான். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 7.44 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. ஆனால் ரெனால்ட் ஆர்பிசி காரானது, அதை விட மிக மிக குறைவான விலையில், அதாவது சுமார் 4.5 லட்ச ரூபாய் அளவில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

எனவே ரெனால்ட் ஆர்பிசி ரூபத்தில், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது. அதிகம் பேர் பயணிக்க கூடிய வகையிலான 7 சீட்டர் எம்பிவி ரக காரை மலிவான விலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு, ரெனால்ட் ஆர்பிசி நல்ல தேர்வாக இருக்கும். ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி மற்றும் ட்யூயல் ஏர் பேக்குகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

இந்த சூழலில் ரெனால்ட் ஆர்பிசி கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அனேகமாக வரும் ஜூலை மாதம் ரெனால்ட் ஆர்பிசி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம், தங்களது நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ET Auto தளத்திற்கு பேட்டியளித்தார். இதில், வரும் ஜூலை மாதம் ஒரு புதிய கார் அறிமுகமாக உள்ளதாக வெங்கட்ராம் தெரிவித்தார். அனேகமாக அது ரெனால்ட் ஆர்பிசியாகதான் இருக்கும் என கூறப்படுகிறது. ஜூலைக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault RBC Will Launch In July 2019-Expected Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X