மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

மிகவும் மலிவான விலையில் களமிறக்கப்படும் புதிய ரெனால்ட் காரின் டீசர் வீடியோ முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்தியாவின் சப்-4 மீட்டர் எம்பிவி செக்மெண்ட்டில், புதிய கார் ஒன்றை களமிறக்கவுள்ளது. அதற்கு ட்ரைபர் (Renault Triber) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ட்ரைபர் என்ற பெயரை ரெனால்ட் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அறிவித்தது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

ரெனால்ட் ட்ரைபர் மிகவும் ஸ்போர்ட்டியான மற்றும் காம்பேக்ட் 7 சீட்டர் எம்பிவி கார் ஆகும். இந்தியாவில் வரும் ஜூலை மாதம் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மிகவும் மலிவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், ரெனால்ட் ட்ரைபர் மீதான ஆவல் மேலோங்கியுள்ளது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

இந்த சூழலில், ட்ரைபர் காரின் டீசர் வீடியோவை ரெனால்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுதான் ரெனால்ட் ட்ரைபர் காரின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் மார்க்கெட்களை குறிவைத்துதான் ரெனால்ட் ட்ரைபர் களத்தில் இறக்கப்படுகிறது. சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்மின் மாடிஃபை செய்யப்பட்ட வெர்ஷன் அடிப்படையில்தான் ரெனால்ட் ட்ரைபர் உருவாக்கப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ கார்களில் பயன்படுத்தப்படும் 3 சிலிண்டர் 1 லிட்டர் எஸ்சிஇ பெட்ரோல் இன்ஜின்தான் ரெனால்ட் ட்ரைபர் காரிலும் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த கார்களை காட்டிலும் ரெனால்ட் ட்ரைபரில் பவர் அவுட்புட் அதிகமாக இருக்கலாம்.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

அதாவது ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஜின் கூடுதலாக 7 எச்பி பவரை வெளிப்படுத்தும் (க்விட்டில் 67 எச்பி) என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆரம்பத்தில் இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

இருந்தபோதும் 2020ம் ஆண்டின் மத்தியில், 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மற்றும் 1 லிட்டர் இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷன் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

இன்டீரியரை எடுத்து கொண்டால், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகளுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் உள்ளிட்ட வசதிகள் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்படவுள்ளன.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

ட்ரைபர் காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மூன்றாவது வரிசை இருக்கையை தேவைப்பட்டால் நீக்கி கொள்ள முடியும் என்பதுதான். அதாவது உங்களின் தேவையை பொறுத்து, கூடுதல் பூட் ஸ்பேஸை பெற முடியும்.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

வெளிப்புற தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, டாப் எண்ட் ட்ரிம்களில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் ஆகியவற்றை ரெனால்ட் நிறுவனம் வழங்கவுள்ளது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

ரெனால்ட் நிறுவனத்தின் லைன் அப்பில் க்விட் மற்றும் டஸ்டர் ஆகிய கார்களுக்கு இடையே ட்ரைபர் நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்தியாவில் தடுமாறி கொண்டிருக்கும் ரெனால்ட் நிறுவனத்திற்கு ட்ரைபர் அதிக விற்பனையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

எனவே ட்ரைபர் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயிக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான (எக்ஸ் ஷோரூம்) விலைகளில் ரெனால்ட் ட்ரைபர் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும்.

மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

ட்ரைபர் தவிர, க்விட் காரின் பேஸ்லிஃப்ட் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. புதிய க்விட் பேஸ்லிஃப்ட் மாடல் எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Reveals Official Teaser Video For The Triber — More Passion For Life Coming July 2019. Read in Tamil
Story first published: Tuesday, May 21, 2019, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X