புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புத்தம் புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. படங்களுடன் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் மினி எம்பிவி ரகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 7 பேர் பயணிப்பதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இது 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்ட காராக இருந்தாலும், டிசைனும் காரின் பரிமாணங்களும் சிறப்பாகவே தெரிகின்றன. எனினும், 4 மீட்டர் மாடல் என்பதால் உருவத்தில் சற்றே சிறிய மாடலாகவே இருக்கிறது. ரெனோ க்விட் காரின் நீளமான மாடல் போலவே காட்சி தருகிறது.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

ரெனோ நிறுவனத்தின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் டெயில் லைட்டுகள் தோற்றத்திற்கு அழகு சேர்க்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள், பின்புற பம்பருக்கான கிளாடிங் சட்டம் ஆகியவை காரின் தோற்றத்தை ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

மூன்றாவது வரிசையில் சிறியவர்களுக்கானதாக தெரிகிறது. 7 சீட்டர் மாடலில் 84 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் பூட் ரூம் கொள்திறனை 625 லிட்டர் என்ற அளவிற்கு அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த கார் வழங்குவது முக்கிய விஷயமாக இருக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் 40 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்ப்டடுள்ளது. 942 கிலோ வெற்று எடை கொண்ட இந்த காார் 182 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பது மிக முக்கிய அம்சமாக கூறலாம்.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய விஷயமாக இருக்கும். புதிய டேஷ்போர்டு அமைப்பு, பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயல்களை சப்போர்ட் செய்யும்.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ரெனோ ட்ரைபர் காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காருக்கு நேர் எதிராகவும், எர்டிகா அளவுக்கு பட்ஜெட் இல்லாதவர்களுக்கு இது 7 சீட்டர் மாற்றாகவும் இருக்கும். மேலும், இதன் 5 சீட்டர் மாடலை பெரிய ஹேட்ச்பேக் கார் போல பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
French car maker, Renault has unveiled much awaited Triber mini MPV car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X