உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் பறந்த ரெனோ ட்ரைபர் கார்

கடந்த மாதம் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் இந்தியாவில் பொது பார்வைக்கு வந்தது. வெறும் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 7 சீட்டர் மாடல் மிக குறைவான பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.4.5 லட்சம் என்ற மிக சவாலான விலையில் இந்த 7 சீட்டர் கார் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

ஹேட்ச்பேக் கார்களுக்கு மாற்றாக இந்த கார் சிறப்பான நடைமுறை பயன்பாட்டு விஷயங்களுடன் வர இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை எழுப்பி இருக்கிறது. மூன்றாவது இருக்கையை எளிதாக கழற்றி மாட்டும் வசதியுடன் வருவதுடன், அதிக அளவிலான பூட் ரூம் இடவசதியையும் பெறும் வாய்ப்பை இந்த மினி எம்பிவி கார் வழங்கும் என்பதே ஆவலை தூண்டும் விஷயம்.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

எனினும், இந்த 7 சீட்டர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட இருப்பது பலருக்கு ஏமாற்றத்தை தரும் விஷயமாக பார்க்கப்பட்டது. முழு பாரத்துடன் செல்லும்போது இதன் எஞ்சின் செயல்திறன் எவ்வாறு இருக்கும், மலைப்பிரதேசங்களில் இதன் செயல்திறன் போதுமானதாக இருக்குமா என்ற கேள்விகள் மனதை துளைத்துக் கொண்டுள்ளன.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

இந்த சூழலில், சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் ரெனோ ட்ரைபர் கார் ஒன்று நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து செல்லும் வீடியோவை ஜெகதீஷ் ஜெகன் என்பவர் வெளியிட்டுள்ளார். அதில், அவர் ரெனோ ட்ரைபர் காரை பின்தொடர்ந்து செல்கிறார்.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அப்போது, ரெனோ ட்ரைபர் கார் 100 கிமீ வேகத்தை கடந்து அனாயசமாக பயணிக்கிறது. அத்துடன், சில வாகனங்களையும், கார்களையும் எளிதாக ஓவர்டேக் செய்து செல்வதையும் காண முடிகிறது. இறுதியில் ஜெகதீஸ் ஜெகன் கூறியிருப்பதுபடி, மணிக்கு 150 கிமீ மேல் வேகத்தில் ரெனோ ட்ரைபர் கார் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரால் கடைசி வரை ரெனோ ட்ரைபர் காரை நெருங்க முடியவில்லை. நெடுஞ்சாலையில் அந்த கார் சிட்டாய் பறந்து செல்வதை வீடியோவை பார்த்த பலரும் ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

நெடுஞ்சாலையில் கார்கள் 100 முதல் 150 கிமீ வேகத்தில் செல்வது புதிய விஷயமல்ல. தலைப்பில் நாம் உருவம் என்று குறிப்பிடுவது இதன்எஞ்சின் திறனைத்தான். ரெனோ ட்ரைபர் காரில் இருப்பது 72 பிஎஸ் பவரை அளிக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின். இதனை வைத்துக்கொண்டு இந்த வேகத்தில் பறப்பதுதான் பலரும் வியப்பாக பார்ப்பதற்கான காரணம். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் காரில் ஓட்டுனர் மட்டுமே இருப்பதால், இந்த வேகத்தில் எளிதாக செல்கிறது. ஆனால், 7 பேர் பயணிக்கும்போது இந்த காரின் கையாளுமை மற்றும் எஞ்சின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பதை ஓட்டி பார்க்கும்போதுதான் தெரிய வரும்.

உருவத்துக்கும் வேகத்துக்கும் சம்பந்தம் இல்லையே... 150 கிமீ வேகத்தில் சிட்டாய் பறந்த ரெனோ ட்ரைபர் கார

புதிய ரெனோ ட்ரைபர் காரில் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் காரைவிட தோற்றத்தில் மிடுக்காக கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால், நிச்சயம் சிறப்பானதாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
Renault Triber caught in high speed testing. Check out the video here.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X