ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

நம்ப முடியாத ஆரம்ப விலையில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வேரியண்ட்டுகள், விலை, சிறப்பம்சங்கள் ஆகிய அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

மினி எம்பிவி ரகம்

புதிய ரெனோ ட்ரைபர் கார் 4 மீட்டர் நீளத்திற்குள்ளான 7 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மினி எம்பிவி கார் மாடலாக வந்துள்ளது. இந்த கார் RXE, RXL, RXT மற்றும் RXZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் வேரியண்ட்டிலேயே அதிக சிறப்பம்சங்களை கொடுத்துள்ளது ரெனோ நிறுவனம்.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

பிளாட்ஃபார்ம்

இந்தியாவின் பட்ஜெட் கார் சந்தையில் பெரும் வெற்றியை பதிவு செய்த, ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில்தான் புதிய ட்ரைபர் காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், 90 சதவீத உதிரிபாகங்கள் க்விட் காரிலிருந்து ட்ரைபர் காரில் முற்றிலும் வேறுபட்டுள்ளதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

பரிமாணம்

புதிய ரெனோ ட்ரைபர் கார் 3,990 மிமீ நீளமும், 1,739 மிமீ அகலமும், 1,643 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,636 மிமீ ஆக உள்ளது. மேலும், 182 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், இந்திய சாலைகளுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

இடவசதி

இது 7 சீட்டர் மாடலாக வந்தாலும், மூன்றாவது வரிசையில் சிறியவர்கள் மட்டுமே பயணிக்கலாம். அதே நேரத்தில், 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும் வசதியை இந்த கார் பெற்றிருக்கிறது.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

இருக்கையை கழற்றும் வசதி

அதாவது, கடைசி வரிசையில் இரண்டு இருக்கைகளை எளிதாக கழற்றி மாட்ட முடியும். இதன் மூன்றாவது வரிசை இருக்கையை கழற்றினால், 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும். இது 5 சீட்டர் மாடலாக இருக்கும்போது, மிக அதிக பூட்ரூம் இடவசதியை அளிக்கும் மாடலாக இருக்கிறது.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

வெளிப்புற அம்சங்கள்

புதிய ரெனோ ட்ரைபர் காரில் முன்புறத்தில் அழகான முன்புற க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், பம்பர்களுடன் இணைந்த ஸ்கிட் பிளேட்டுகள், பாடி கிளாடிங் சட்டங்கள் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

MOST READ: பெண் எம்பி வந்த கார் மீது போலீசார் நடவடிக்கை... அந்த மூத்த அரசியல் தலைவரின் மகள் யார் என தெரியுமா?

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

உட்புற அம்சங்கள்

புதிய ரெனோ க்விட் காரில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உட்புறமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

MOST READ: எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு.. யார் அந்த ராஜா?

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

இதர அம்சங்கள்

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேவிகேஷன், புஷ் டு டாக், வீடியோ பிளேபேக் வசதி (கார் நிற்கும்போது மட்டும் செயல்படும்), ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றிருப்பதும் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

MOST READ: புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ் பைக்குகளை கிளாசிக் மாடலாக மாற்றும் டீலர்கள்... எதற்காக தெரியுமா?

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

எஞ்சின்

புதிய ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்துள்ளது.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

பாதுகாப்பு வசதிகள்

புதிய ரெனோ ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகளும், இதர வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா(ஆப்ஷனல்) உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

வண்ணத் தேர்வுகள்

புதிய ரெனோ ட்ரைபர் கார் ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், எலெக்ட்ரிக் புளூ, ஃபியரி ரெட் மற்றும் மெட்டல் மஸ்டர்டு ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதில், ஃபியரி ரெட் இதன் விசேஷ வண்ணத் தேர்வாக இருக்கும்.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

விலை விபரம்

புதிய ரெனோ ட்ரைபர் கார் ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிற வேரியண்ட்டுகளும் மிக குறைவான விலை வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட் மாடலுக்கு ரூ.6.49 லட்சம் என்ற சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Variant Price
RXE Rs 4.95 Lakh
RXL Rs 5.49 Lakh
RXT Rs 5.99 Lakh
RXZ Rs 6.49 Lakh
ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

போட்டியாளர்கள்

புதிய ரெனோ ட்ரைபர் காருக்கு நேரடி போட்டியாளர் டட்சன் கோ ப்ளஸ் கார்தான். ஆனால், விலை அடிப்படையில் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட ஹேட்ச்பேக் கார்களின் சந்தையை குறிவைத்து தனித்துவமான தேர்வாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

முன்பதிவு விபரம்

புதிய ரெனோ ட்ரைபர் காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு ஏற்கனவே நடந்து வருகிறது. ஆன்லைன் மற்றும் டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று விலை அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ரினால்ட் #renault
English summary
Renault Triber launched in India with a starting price of 4.95 lakh. The all-new Renault Triber is a sub-4 metre compact MPV offering, which will rival the likes of the Maruti Suzuki Ertiga in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X