வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

இந்தியாவில் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் ரெனோ ட்ரைபர் கார் வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, சென்னையிலிருந்து ரெனோ ட்ரைபர் கார் ஏற்றுமதியும் துவங்கப்பட்டு இருக்கிறது.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரெனோ ட்ரைபர் கார் மினி எம்பிவி கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 7 பேர் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் இந்த மினி எஸ்யூவி மாடல் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்ததால், ஹேட்ச்பேக் கார்களுக்கு டஃப் கொடுக்கத் துவங்கி இருக்கிறது.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

இதுவரை 20,000 ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெனோ ட்ரைபர் கார் சென்னையிலுள்ள ரெனோ - நிஸான் கார் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கி இருக்கின்றன.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

முதல்கட்டமாக 600 ரெனோ ட்ரைபர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக, ரெனோ இந்தியா நிறுவனத்தின் வர்த்தகம் மேலும் வலுப்பெறும்.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

ரெனோ நிறுவனத்தின் வெற்றிகரமான க்விட் கார் மற்றும் டட்சன் ரெடிகோ கார்கள் உருவாக்கப்பட்ட சிஎம்எஃப்-ஏ கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில்தான் புதிய ட்ரைபர் காரும் உருவாக்கப்பட்டது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய இந்த கார் ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்தது.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

அருமையான டிசைன் மட்டுமின்றி, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 14 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் என பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வந்ததால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

இந்த காரில் எல்இடி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் கீ கார்டு, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு ஏசி வென்ட்டுகள் என அசத்துகிறது.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. விரைவில் பிஎஸ்-6 மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளிலும் வெற்றியை ருசிக்க புறப்பட்டது ரெனோ ட்ரைபர்!

புதிய ரெனோ ட்ரைபர் கார் ரூ.4.95 லட்சம் முதல் ரூ.6.63 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டட்சன் கோ ப்ளஸ், மாருதி எர்டிகா உள்ளிட்ட எம்பிவி கார்கள் மற்றும் ஹேட்ச்பேக் கார்களுக்கு சவாலான விலையில் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
Mr Ventatram Mamillapalle, the Chief Executive Officer and Managing Director at Renault India, said that there are over 20,000 Renault Triber units on Indian roads, and that these numbers give them the confidence that it will be just as successful in potential foreign markets such as other African and South Asian Association for Regional Cooperation nations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X