ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட 7 சீட்டர் மாடல் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலும் ஆவலை எகிடுதகிடான அதிகரித்துள்ளது. இந்த புதிய கார் கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே வந்த டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் எடுபடாத நிலையில், ரெனோ நிறுவனம் ட்ரைபர் காரை புதிய அணுகுமுறையில் களமிறக்க உள்ளது.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

அதாவது, ரெனோ ட்ரைபர் காரின் இருக்கை அமைப்பை வெவ்வேறு வகையில் மாற்றிக் கொண்டு, நடைமுறைக்கு மிகச் சிறந்த மாடலாக நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ரெனோ ட்ரைபர் காரின் இடவசதி மற்றும் இருக்கை அமைப்பில் இருக்கும் விசேஷ அம்சங்களை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

கார் உள்பகுதியில் பல்வேறு பயன்பாடுகளுக்கு தக்கவாறு ஸ்டோரேஜ் மற்றும் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு க்ளவ் பாக்ஸ் அமைப்பு, சென்ட்ரல் கன்சோல் கீழ் பகுதியில் ஸ்மார்ட்ஃபோன் வைப்பதற்கான சிறப்பான இடவசதி உள்ளது. அதற்கு அடுத்து கியர் லிவருக்கு இடையிலான பகுதியிலும் பெரிய ஸ்டோரேஜ் பகுதி உள்ளது.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

இரண்டாவது இருக்கையில் மூன்று பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த இருக்கையானது 60:40 விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு இருக்கையை முழுவதுமாக மடித்து வைக்க இயலும். மற்றொரு இருக்கையை முன்னோக்கி நகர்த்தும் வசதியை பெற்றிருக்கிறது.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

மூன்றாவது இருக்கையை நீக்கினால் ஏராளமான இடவசதியை பெற முடியும். இரண்டாவது வரிசை இருக்கையின் ஒற்றை இருக்கையை முழுவதுமாக மடக்கி முடிவதால், ஏறி, இறங்குவதற்கும் எளிதாக அமையும். மூன்றாவது வரிசை இருக்கையில் வசதியாக அமர்ந்த பின்னர், இரண்டாவது வரிசை இருக்கையை சரிசெய்து கொள்ளலாம்.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

இந்த காரில் மூன்றாவது வரிசை இருக்கையை முழுவதுமாக கழற்றி மாட்ட முடியும். இதனால், பொருட்கள் வைப்பதற்கு சிறப்பான பூட்ரூம் இடவசதியை பெற முடியும். அதுவும், இது தனித்தனி இருக்கைகளாகவும் கொடுக்கப்பட்டு இருப்பதால், எளிதாக கழற்றி மாட்டலாம்.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

இரண்டாவது இருக்கை அமைப்புதான் இதுபோன்ற கார்களில் மிக முக்கிய விஷயமாக இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கைகளை நகர்த்தும் வசதியை பெற்றிருப்பதுடன், சாய்மான வசதியையும் அளிக்கும். இதனால், பயணங்களின்போது சாவகாசமான அனுபவத்தை தரும்.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ரியர் ஏசி வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோ வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பிலும், வசதிகளிலும் குறைவில்லாத காராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

மேலும், ரெனோ ட்ரைபர் காரின் விலை குறைவான மாடல் ரூ.4.5 லட்சத்திலும், விலை உயர்ந்த மாடலை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையிலும் அறிமுகம் செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரெனோ ட்ரைபர் நடைமுறை பயன்பாட்டிற்கு எவ்வாறு சிறந்தது? - வீடியோ!

இது நிச்சயம் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பு வாய்ந்த மாடலாக இருக்கும் என்பதுடன், முதல்முறையாக கார் வாங்குவோரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி இருக்கும். இருப்பினும், குழந்தைகளை மடியில் வைத்து கஷ்டப்பட்டு பயணிப்போருக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
French car maker, Renault has released a new video that shows the Triber’s smart practical things and storage options.
Story first published: Thursday, July 4, 2019, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X