செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் விற்பனை அமோகமாக அமைந்தது. இதன் ரகத்திலான இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரின் விற்பனையையும் முந்தியுள்ளது.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

கடந்த ஆகஸ்ட் மாதம் ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.4.95 லட்சம் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் வந்தததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனையில் ரெனோ எம்பிவி கார் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து துவண்டு போய் கிடந்த ரெனோ நிறுவனத்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கடந்த மாதம் 4,710 ரெனோ ட்ரைபர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

விலை அடிப்படையில் ஒப்பிட முடியாவிட்டாலும், எம்பிவி ரகத்தின் அடிப்படையில் இன்னோவாவின் விற்பனையை புதிய ரெனோ ட்ரைபர் கார் விஞ்சிவிட்டது. கடந்த மாதம் 4,225 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையான நிலையில், ரெனோ ட்ரைபர் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

புதிய ரெனோ ட்ரைபர் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மிகச் சிறப்பான மாடலாக வந்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், நடைமுறை பயன்பாட்டுக்கு தக்கவாறு இருக்கை மற்றும் இடவசதியை மாற்றிக் கொல்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

இந்த கார் மூன்று வரிசை இருக்கைகளுடன் 7 பேர் செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அத்துடன், 182 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிருப்பதால், நடைமுறையில் பயன்படுத்துவதற்கு சிறந்த மாடலாக இருக்கும்.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

புதிய ரெனோ ட்ரைபர் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், பாடி க்ளாடிங் சட்டங்கள், பம்பரில் இயைந்து பொருத்தப்பட்டுள்ள ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை கவர்ச்சியையும், மதிப்பையும் அளிக்கின்றன.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான டியூவல் டோன் இன்டீரியர் அமைப்பு, 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைக்கான தனி ஏசி வென்ட்டுகள் ஆகியவை மதிப்பு சேர்க்கின்றன.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

இந்த காரின் பெரிய குறையாக பார்க்கப்படும் விஷயமே இதன் எஞ்சின்தான். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

ரூ.4.95 லட்சம் முதல் ரூ.6.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் கிடைக்கிறது. விலை அடிப்படையில் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்கள் மற்றும் மினி எஸ்யூவிகளுடன் போட்டி போடுகிறது. ரகத்தின் அடிப்படையில் மாருதி எர்டிகா காருடன் மோதுகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Triber sales is off to a good start in the Indian market. The company launched the Triber MPV in India back in August 2019, with September being its first full month of sales. The company has managed to receive a good response to the MPV in India, which is offered with a starting price of Rs 4.95 lakh, ex-showroom.
Story first published: Wednesday, October 9, 2019, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X