ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் நாளை ரிலீசாக உள்ள நிலையில், ஆவலைத் தூண்டும் வகையில் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

ரெனோ ட்ரைபர் காரின் முகப்பு டிசைன் எம்பிவி கார்கள் போன்று சாதுவாக இல்லாமல், எஸ்யூவி மாடல்களுக்கு உரிய மிரட்டலான தொனியில் இருக்கிறது. ரெனோ கேப்ச்சர் காரின் முன்புற டிசைன் அம்சங்கள் இந்த காரில் பிரதிபலிக்கின்றன.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

வலிமையான பானட் மற்றும் க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள் முகப்பின் முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. நிச்சயம் இது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் என்று நம்பலாம்.

ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக தெரிகிறது. அதேபோன்று, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடலாகவும் இருக்கும்.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

இந்த கார் ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்- ஏ பிளாட்ஃபார்மின் அடிப்படையில் சில மாறுதல்களுடன் 7 சீட்டர் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், உட்புற இடவசதி போதுமானதாக இருக்கும் என்பது காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போதுதான் கூற முடியும்.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

புதிய ரெனோ ட்ரைபர் காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின் சிறிய மாறுதல்களுடன் இதில் பயன்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் நாளை ரிலீசாக இருக்கிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டட்சன் கோ ப்ளஸ் மற்றும் மாருதி எர்டிகா காருக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
Renault India has teased the upcoming Triber MPV ahead of its globa unveil. A picture, teasing the Renault Triber has been put out by Renault India just two days ahead of the unveiling. The teaser previews the design of the MPV that is set to be unveiled on 19 June, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X