இந்திய மார்க்கெட்டில் மலிவான விலையில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலிவான விலை ரெனால்ட் கார் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியே கசிந்துள்ளது.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மற்றும் டஸ்டர் உள்ளிட்ட கார்கள் இந்திய மார்க்கெட்டில் ஓரளவிற்கு பிரபலமாக உள்ளன. ஆனால் லாட்ஜி உள்ளிட்ட எஞ்சிய மாடல்கள் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. எனவே இந்திய மார்க்கெட்டில் தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை சற்று 'டல்' ஆகவே உள்ளது.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

ஆனால் வரும் காலங்களில் இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டிருப்பதே இதற்கு காரணம். இந்த வரிசையில் முதலாவதாக வரவிருக்கும் கார் ட்ரைபர். ரெனால்ட் ட்ரைபர் 7 சீட்டர் மாடல் ஆகும்.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

போதிய இடவசதியுடன் ஸ்டைலான டிசைனில் ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் மிகவும் மலிவான விலையில் ரெனால்ட் ட்ரைபர் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார் குறித்து அவ்வப்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

இந்த வரிசையில் ரெனால்ட் ட்ரைபர் காருக்கான புக்கிங் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த சூழலில், ரெனால்ட் ட்ரைபர் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. RXE, RXS, RXT மற்றும் RXZ என ரெனால்ட் ட்ரைபர் காரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதுகுறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வேரியண்ட்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் (ஏஎம்டி) டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. ரெனால்ட் ட்ரைபர் காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர் 'எனர்ஜி' பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும்.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் Easy-R ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. ரெனால்ட் ட்ரைபர் கார், சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீளம் 3,990 மிமீ. அகலம் 1,739 மிமீ. உயரம் 1643 மிமீ (ரூஃப் ரெயில்ஸ் இல்லாமல்). வீல்பேஸ் 2636 மிமீ.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

ரெனால்ட் ட்ரைபர் கார் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வரவுள்ளது. மூன்று வரிசைகளையும் பயன்படுத்தும் நிலையில் இதன் பூட் ஸ்பேஸ் 84 லிட்டர்கள். ஆனால் 5 சீட்டராக பயன்படுத்தும்போது, 625 லிட்டர்கள் ஸ்டோரேஜ் ஸ்பேஸை நீங்கள் பெற முடியும். கூல்டு க்ளவ் பாக்ஸ், சென்டர் கன்சோலில் கூல்டு ஸ்டோரேஜ் ஏரியா உள்ளிட்ட வசதிகளுடன் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு வரவுள்ளது.

மலிவான விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்

அத்துடன் அனைத்து வரிசைகளிலும் 12V சார்ஜிங் சாக்கெட்கள் மற்றும் ஏசி வெண்ட்களும் இடம்பெறவுள்ளன. பாதுகாப்பு என எடுத்து கொண்டால், ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஃப்ரண்ட் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளன. ரெனால்ட் ட்ரைபர் கார் 4.5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாயாக இருக்கலாம். பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் ட்ரைபர் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Triber Variant Details Leaked. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X