ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்.. அதிர்ச்சியில் நிர்வாகம்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல மாடலான கிளாசிக் 350 பைக், கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

இந்தியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், பாரம்பரிய ரகத்திலான பைக்குகளைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக, கிளாசிக் 350 மாடல் பைக் உள்ளது. அதேசமயம், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் பைக்காகவும் இதுவே இருக்கின்றது. இந்த பைக்கினை, ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக 2010ம் ஆண்டுதான் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

இந்நிலையில், இந்த புகழ்வாய்ந்த பைக்கின் விற்பனை அண்மைக் காலங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, கடந்த ஆறு மாதங்களாகவே, அதாவது 2019ம் ஆண்டு துவங்கியது முதல், கிளாசிக் 350 மாடல் பைக்கின் விற்பனை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

அந்த வகையில், கடந்த மே மாதத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் மாடல் பைக் 35,998 யூனிட்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதில், ஸ்டாண்டர்டு வெர்ஷன், கன் மெட்டல் க்ரே மற்றும் சிக்னல்ஸ் மாடல்கள் அடங்கும். ஆனால், இதுவே கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் பார்த்தோமேயானால் 51,147 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

அதேபோன்று, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பார்த்தோமேயானால், 27 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது. இவ்வாறு, கிளாசிக் 350 பைக்கின் விற்பனை தொடர்ச்சியாக வீழ்ச்சியையேச் சந்தித்து வருகின்றது. கிளாசிக் 350 மாடலின் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு ஜாவா மோட்டார்சைக்கிளின் வருகையே காரணமாக கூறப்படுகின்றது. அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம் சந்தித்த உற்பத்தி குறைவு மற்றும் பணியாளர்களின் போராட்டங்கள் உள்ளிட்டவையும் இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

ராயல் என்பீல்டு, கிளாசிக் மாடலை அப்கிரேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில், புதிய மெக்கானிக்கல் வசதியாக இந்த பைக்கில் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, இந்த பைக்கின் ஸ்டைலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த வருடத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்ப்டுகின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

முன்னதாக, ராயல் என்பீல்டு இந்த கிளாசிக் மாடலை ஏபிஎஸ் தரத்திற்கேற்ப தயார் செய்து அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதியைப் பெற்ற கிளாசிக் ரூ.1.53 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, ஏபிஎஸ் அல்லாத மாடலைவிட ரூ. 5,800 கூடுதல் விலையாகும். இந்த மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஆப்ஷனலாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்... அதிர்ச்சியில் நிர்வாகம்...

க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறன்து. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்குகின்றது.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 Sales Decline In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X