Just In
- 29 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 45 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
சல்மான் கான் பரிசாக வழங்கிய 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை, அவரது அம்மா பயன்படுத்த மறுத்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.
பாலிவுட் திரை உலகில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான் (Salman Khan). பாலிவுட் திரையுலகை கடந்து, இந்திய மற்றும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக சல்மான் கான் திகழ்ந்து வருகிறார்.
லக்ஸரி எஸ்யூவி வகையை சேர்ந்த ஏராளமான விலை உயர்ந்த கார்களை சல்மான் கான் வைத்துள்ளார். இந்த சூழலில், தனது அம்மா சல்மா கானுக்காக (Salma Khan), புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி (Land Rover Range Rover LWB) கார் ஒன்றை சல்மான் கான் வாங்கியுள்ளார்.
சல்மான் கான் டிசம்பர் 27ம் தேதியில் பிறந்தவர். இதனால் அவரது பெரும்பாலான கார்கள் '2727' என்ற பதிவு எண்ணையே கொண்டுள்ளன. இந்த வகையில் தன் அம்மாவிற்காக சல்மான் கான் வாங்கிய புத்தம் புதிய காரும் '2727' என்ற பதிவு எண்ணைதான் பெற்றுள்ளது.
வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலையே 1.87 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு விலை உயர்ந்த காரை மிகவும் சர்ப்ரைஸான முறையில் தனது அம்மாவிற்கு பரிசளித்துள்ளார் சல்மான் கான்.
எல்டபிள்யூபி என்பது 'லாங் வீல் பேஸ்' (Long Wheel Base) என்பதை குறிக்கிறது. ரெகுலர் வெர்ஷனை காட்டிலும், எல்டபிள்யூபி வெர்ஷன் அதிக இட வசதியுடன் உள்ளது. சல்மான் கான் தனது அம்மாவிற்கு திடீரென இந்த காரை பரிசளித்தது ஏன்? என்பதற்கான காரணத்தை மும்பை மிரர் வெளியிட்டுள்ளது.
சல்மான் கானின் அம்மா தனது தினசரி பயன்பாட்டிற்கு புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்திருந்தார். ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களுக்கும் மிக எளிதாக சென்று வரும்படி சிறிய காரை வாங்கதான் சல்மான் கானின் அம்மா எண்ணியிருந்தார்.
இந்த தகவல் சல்மான் கானுக்கு தெரியவந்தது. உடனே 1.87 கோடி ரூபாயில், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி காரை வாங்கி தன் அம்மாவிற்கு பரிசளித்து விட்டார். ஆனால் மகன் சல்மான் கான் அளித்த பரிசை, அவரது அம்மா அதிகம் பயன்படுத்துவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு காரணம் உள்ளது. சல்மான் கான் பரிசளித்திருப்பது மிக பிரம்மாண்டமான கார். ஆனால் சல்மான் கானின் அம்மா, போக்குவரத்து நெரிசலில் எளிதாக சென்று வரும் வகையில் சிறிய காரைதான் பார்த்து கொண்டிருந்தார்.
இதுதவிர சல்மான் கான் பரிசளித்துள்ள கார், மிக பெரிதாகவும் மற்றும் மிக உயரமாகவும் உள்ளது. இதனால் வயதில் மூத்தவரான சல்மான் கானின் அம்மாவால், இந்த காரில் சௌகரியமாக ஏறி, இறங்க முடியவில்லை என கூறப்படுகிறது.
மிகவும் உயரமான மற்றும் மிகவும் தாழ்வான கார்களில், வயதானவர்களால் எளிதாக ஏறி, இறங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழும் சல்மான் கான் இதனை கருத்தில் கொள்ளாமல் காரை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, அவரது அம்மா எளிமையை விரும்ப கூடியவர். மாருதி சுஸுகி ஸ்விப்ட் உள்ளிட்ட எளிமையான கார்களில் அவர் வலம் வந்ததை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.
ஆனால் தற்போது விலை உயர்ந்த ஒரு கார் பரிசாக கிடைத்துள்ள போதும், அவரால் முறையாக பயன்படுத்த முடியவில்லை. எனவே எளிதாக ஏறி, இறங்க கூடிய வகையிலான புதிய கார் ஒன்றை அவருக்கு சல்மான் கான் மீண்டும் பரிசளிக்கலாம் என கூறப்படுகிறது.
சல்மான் கான் தனது அம்மாவிற்காக வாங்கிய காரின் நீளம் 5.2 மீட்டர்கள். இந்தியாவில் விற்பனையாகும் நீளமான கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில், 3.0 லிட்டர், வி6 டீசல் இன்ஜின் (3.0-litre V6 Diesel Engine) பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 4,000 ஆர்பிஎம்மில் 254 பிஎச்பி பவரையும், 2,250 ஆர்பிஎம்மில் 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. எஸ்யூவி வகையை (SUV) சேர்ந்த இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 209 கிலோ மீட்டர்கள்.
பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 8.3 வினாடிகளில் எட்டி விடும். இதனிடையே சல்மான் கான் மிக தீவிரமான ஆட்டோமொபைல் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன.
இதில், ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய ரேஞ்ச் ரோவர், கடைசி தலைமுறை ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் (Mercedes-Benz S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE), மற்றும் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் ப்ராடோ (Toyota Land Cruiser Prado) ஆகியவை முக்கியமானவை.
இதுதவிர ஏராளமான மோட்டார் சைக்கிள்களையும் சல்மான் கான் வைத்துள்ளார். சல்மான் கான், சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா (Suzuki Motorcycles India) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் என்பது குறிப்பிடத்தக்கது. சுஸுகி ஹயபுசா மற்றும் சுஸுகி இன்ட்ரூடர் உள்ளிட்ட பல்வேறு மோட்டார் சைக்கிள்களை சல்மான் கான் வைத்துள்ளார்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு