டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லா அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலக்கம்

ஆட்டோமொபைல்ஸ் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய டெஸ்லா தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனம், கால் டாக்ஸி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

அண்மைக் காலங்களாக ஆட்டோமொபைல்ஸ் துறையில் புரட்சியை செய்து வரும் டெஸ்லா நிறுவனம், தற்போது கால் டாக்ஸி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டெஸ்லாவின் இந்த அறிவிப்பால், கால் டாக்ஸியைச் சார்ந்து இருக்கும் ஓட்டுநர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம் தானியங்கி மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிறுவனத்தின் வருகையால், ஏற்கனவே பல்வேறு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கணிசமான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் தானியங்கி மின் கார்களை கால் டாக்ஸி சேவையில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, அடானமஸ் ரோபோ டாக்ஸிகளை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ எலன் முஸ்க் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எலக்ட்ரிக் கார்கள் ஓட்டுநர் இல்லாத கால் டாக்ஸி சேவையில் வருகின்ற 2020 ஆம் ஆண்டிற்குள் களமிறக்கப்பட உள்ளது. இதற்கான கார்களை தயாரிக்கும் பணியும், அவற்றிற்கான ஒப்புதலைப் பெறும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

மேலும் பேசிய அவர், "வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் தானியங்கி ரோபோ டாக்ஸிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், இது அமெரிக்காவின் அனைத்து நகரங்களில் பயன்பாட்டிற்கு வராது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முதல்கட்டமாக கால் டாக்ஸி சேவை தொடங்கப்படும். பின்னர், போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னர் நாட்டின் பிறப்பகுதிகளிலும் இந்த சேவை தொடங்கப்படும்" என தெரிவித்தார்.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

டெஸ்லாவின் இந்த தானியங்கி ரோபோ டாக்ஸியில், பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ரோபோ டாக்ஸிகள் தானாகவே டாக்ஸி நிறுத்தத்திற்கு வந்து, அதுவாகவே சார்ஜ் செய்துக்கொள்ளும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ளது.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

இதற்கான மைக்ரோ சிப் தொழில்நுட்பத்தை டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து உறுவாக்கிவிட்டது. இதைத்தான், தற்போது வெளியாக இருக்கும் அனைத்து கார்களிலும் அந்த நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

மேலும், இந்த கால் டாக்ஸி சேவைக்காக டெஸ்லா நிறுவனம் ஒரு மில்லியின் ரோபோ டாக்ஸிகளை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவையனைத்திலும், ஆட்டோமேடிக்காக காரை இயக்கும் மற்றும் சார்ஜ் செய்யும் மென்பொருள்கள் இணைக்கப்பட உள்ளன.

கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பை பை சொல்லும் நேரம் வந்தாச்சி: டெஸ்லாவின் அறிவிப்பால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!

இதேபோன்று, ஊபர் நிறுவனமும் அதன் அடுத்த தலைமுறை கால் டாக்ஸி சேவையான ஃபிளையிங் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் முதல்கட்டமாக அமெரிக்காவின் டல்லஸ் மற்றும் லாஸ் ஏஞ்ஜெல்ஸில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து, இந்த திட்டத்தினை ஊபர் நிறுவனம், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா பிரேஸில் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Self-Driving Tesla Robotaxi Coming In 2020. Read In Tamil.
Story first published: Tuesday, April 23, 2019, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X