பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

பெட்ரோல் காரில் டீசலையும், டீசல் காரில் பெட்ரோலையும் நிரப்பி ஷெல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அடாவடி தனத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

வாகனங்கள் என்பது அநேகரின் கனவுகளில் ஒன்றாக இருக்கின்றது. அவ்வாறு, பல்வேறு கனவுகளுடன் வாங்கப்படும் வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் அதனை குடும்பத்தில் ஒன்றாகவே பார்க்கின்றனர்.

அதனை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது உள்ளிட்டவற்றிற்காக பெருமளவிலான தொகையைச் செலவிட்டு வருகின்றனர்.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

அந்தவகையில், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் வாகனங்களின் உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்புவதிலும் தரம் வாய்ந்ததையே பயன்படுத்த விரும்புகின்றனர்.

இதற்காக, தரமான எரிபொருள் எங்கு கிடைக்கும் என கூகுளில் தேடி அவர்களின் கீ போர்டையே தேய்த்து விடுகின்றனர். இதில், பெரும்பாலானோரின் தேர்வாக ஷெல் பெட்ரோல் பங்குகள் இருக்கின்றன.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

இங்கு தரமான பெட்ரோல் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே மற்ற சில பெட்ரோல் பங்குகளைக் காட்டிலும் இங்கு சற்று கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதேசமயம், ஷெல் பெட்ரோல் பங்குகளில் மற்ற எரிபொருள் நிலையங்களைக் காட்டிலும் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்கப்படுகின்றது.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

இதற்கு அவர்கள் கூறும் ஒரே காரணம், தரம்தான். இருப்பினும், விலையைப் பொருட்படுத்தாத வாகன ஓட்டிகள், வாகனங்களின் நீடித்த உழைப்பிற்காக இங்கு எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஷெல் பெட்ரோல் பங்கை நாடிச் சென்ற ஓர் வாகன ஓட்டிக்கு எரிபொருள் மாற்றி நிரப்பப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

இச்சம்பவம், ஐரோப்பா நாட்டில் உள்ள புத்தாபெஸ்ட் என்னும் பகுதியில் அரங்கேறியுள்ளது. நல்ல வேலை நம்ம நாட்டில் இது நடைபெறவில்லை என நினைக்கிறீர்களா...? அப்படி நினைக்க வேண்டும். ஏனென்றால், நம் நாட்டிலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இதற்கு முன்பாக நடைபெற்றிருக்கின்றன.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

ஆனால், தற்போது புத்தாபெஸ்ட் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அதிகளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், பெட்ரோலுக்கு பதிலாக டீசலைப் நிரப்புவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, இதேப்போன்று 500க்கும் மேற்பட்டோருக்கு எரிபொருள் மாற்றி நிரப்பப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

அந்தவகையில், டீசல் வாகனங்களுக்கு பெட்ரோலையும், பெட்ரோல் வாகனங்களுக்கு டீசலையும் ஷெல் பங்க் ஊழியர்கள் நிரப்பியுள்ளனர். அவ்வாறு, எரிபொருளை மாற்றிப் பெற்ற வாகன ஓட்டிகள் தங்களின் ஆதங்கத்தையும், எதிர்ப்புகளையும் முகப்புத்தக பதிவின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

அந்தவகையில், நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மட்டும் எரிபொருள் மாற்றி நிரப்பப்பட்டதாகக் கூறி நூற்றுக்கும் அதிகமானோர் புகார்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட தங்களின் கார்களை சீர் செய்ய இழப்பீடு ஒன்றுதான் வழி என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

இதுகுறித்த எரிபொருள் மாற்றிப் பெற்ற இளைஞர் ஒருவர் கூறியதாவது, "கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷெல் பெட்ரோல் பங்கிற்கு சென்ற நான், என்னுடைய காரின் ப்யூவல் டேங்கினை முழுமையாக நிரப்பினேன். ஆனால், அப்போது என்னுடைய காரில் எரிபொருள் மாற்றி பெற்றதை என்னால் உணர முடியவில்லை. சிறிது தூரம் சென்ற பின்னர் கார் எஞ்ஜின் தானாக நின்றது. அதையடுத்து என்னால் காரை ஸ்டார்ட் செய்யவே முடியவில்லை. பின்னர், அங்கிருந்து வேறொரு வாகனம் மூலமாகவே என்னுடைய கார் இழுத்துச் செல்லப்பட்டது" என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Shell Petrol Station Fills Wrong Fuel. Read In Tamil.
Story first published: Wednesday, September 25, 2019, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X