மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் மற்றும் ஹைப்ரிட் கார்களுக்காக புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தில் மின்சார கார்களுக்கான சந்தையை கருத்தில்கொண்டு புதிய மின்சார மாடல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

இதற்காக iV என்ற பெயரில் புதிய துணை பிராண்டையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கும் விதத்தில் நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

அடுத்த ஆண்டு 2 புதிய மின்சார கார்களை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார்கள் ஃபோக்ஸ்வேகன் MEB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என்றும், விஷன் ஐவி எஸ்யூவி கூபே கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலாக வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

வரும் 2022ம் ஆண்டிற்குள் தனது புதிய ஐவி பிராண்டில் 10 மின்சார கார்களை விற்பனையில் வைப்பதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சிட்டிகோ என்ற சிறிய ஹேட்ச்பேக் காரின் மின்சார மாடலை முதலாவதாக ஐவி பிராண்டில் அறிமுகம் செய்வதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

சிட்டிகோ எலெக்ட்ரிக் காரில் 82 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மின் மோட்டார் உள்ளது. இந்தகார் 0 -100 கிமீ வேகத்்தை 12.5 வினாடிகளில் எட்டிவிடும்.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 265 கிமீ தூரம் பயணிக்கும்.. இந்த காரின் உற்பத்தி இந்த ஆண்டு பிற்பாதியில் துவங்கப்பட உள்ளது.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

மேலும், ஐவி பிராண்டில் ஹைப்ரிட் கார்களும் வர இருக்கின்றன. முதல் மாடலாக சூப்பர்ப் காரின் ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.

மின்சார கார்களுக்கு புதிய பிராண்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா ஆட்டோ!

இந்த பெட்ரோல் எஞ்சின் 154 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மின்மோட்டாருடன் இணைந்து அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இந்த காரில் 13 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். பேட்டரி மின்திறனை பயன்படுத்தி 55 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched a new iV sub-brand for electric and hybrid vehicles.
Story first published: Tuesday, May 28, 2019, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X