புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

ஸ்கோடா கமிக் மற்றும் கரோக் எஸ்யூவிகளின் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

இந்தியாவில் வர்த்தகத்தை வலுப்படுத்தும் முனைப்பில் ஸ்கோடா ஆட்டோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, பல புதிய மாடல்களை களமிறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய எஸ்யூவி மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஸ்கோடா நிறுவனத்தின் புதி கமிக் மற்றும் கரோக் எஸ்யூவிகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், ஸ்கோடா பிரியர் ஒருவர் கமிக் மற்றும் கரோக் எஸ்யூவிகளின் இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார். ரவி பலிகா என்பவர் ட்விட்டரில்,"ஸ்கோடா வாடிக்கையாளரான நாங்கள் எம்ஜி மற்றும் கியா ஷோரூம்கள் நோக்கி செல்வதற்கு முன்னர், கமிக், கரோக் எஸ்யூவி அறிமுகம் குறித்து தெரிவிக்க இதுதான் சரியான நேரம் என்று வினவியிருந்தார்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் ஸாக் ஹோல்லிஸ்," அடுத்த ஆண்டு முதல் அரையாண்டில் கரோக் எஸ்யூவியும், 2021ம் ஆண்டு மத்தியில் மிட்சைஸ் எஸ்யூவியையும் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

இதன்படி, கரோக் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். கமிக் எஸ்யூவியானது கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி சற்று பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். ரூ.20 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏ0 என்ற பிளாட்ஃபார்மில் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட இருக்கும். ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் மினியேச்சர் வெர்ஷன் போல இதன் டிசைன் அம்சங்கள் இருக்கும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இடம்பெறும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த எஸ்யூவியில் எக்கச்சக்கமான நவீன தொழில்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம். நிஸான் கிக்ஸ், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு இணையான ரகத்தில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

வெளிநாடுகளில் இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பை இந்த இரண்டு மாடல்களும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Karoq And Kamiq SUVs India Launch Details Revealed By Skoda India Sales Director Zac Hollis. Read the details in Tamil.
Story first published: Monday, August 19, 2019, 18:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X