ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஓனிக்ஸ் எடிசன் என்ற பெயரிலான சிறப்பு பதிப்பு மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழு விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் மாடலில் கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கதவுகளில் விசேஷமான ஸ்டிக்கர் அலங்காரம், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண சைடு மிரர்கள், கருப்பு வண்ண 16 அங்குல அலாய் வீல்கள், ஸ்பாய்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரின் உட்புறத்தில் கருப்பு வண்ண உயர்தர லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரோம் பாகங்களுடன் மிக பிரிமீயமாக காட்சி தருகின்றன. தட்டையான அடிப்பாகத்துடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிஃப்ட் வசதி, துளைகள் அமைப்புடன் கூடிய லெதர் சீட் கவர்கள், ஓட்டுனர் இருக்கைக்கான மெமரி வசதி, 12 விதமான நிலைகளில் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்லிங்க் மற்றும் மிரர்லிங்க் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், அடாப்டிவ் ஃப்ரண்ட் லைட் சிஸ்டம், கார் திரும்பும் திசையில் ஒளியை பாய்ச்சும் விசேஷமான அடாப்டிவ் ஃப்ரண்ட் ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், இபிடியுடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

பின் இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்கிக் கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலமாக 590 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை 1,580 லிட்டர் கொள்திறனாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் மாடலில் 180 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 143 பிஎச்பி பவரையம், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன. பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் மாடலானது கேண்டி ஒயிட், ரேஸ் புளூ மற்றும் காரிடா ரெட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் ரூ. 19.99 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். அனைத்து டீலர்களிலும் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched the Octavia Onyx sedan in the Indian market. The new Skoda Octavia Onyx is offered in two variants with a starting price of Rs 19.99 lakh, ex-showroom (Delhi). The new Octavia Onyx sedan comes with a host of cosmetic updates and added features; both inside and out.
Story first published: Thursday, October 10, 2019, 18:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X