புதிய ஸ்கோடா ரேபிட் கார் அட்டகாசமா இருக்கு... ஆனால், இதுதான் பெரும் ஏமாற்றம்!

புதிய ஸ்கோடா ரேபிட் கார் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் மிக அட்டகாசமாக இருந்தாலும், இந்தியர்களுக்கு ஒரு ஏமாற்றமான தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் சிறந்த தேர்வாகவும், தனி வாடிக்கையாளர் வட்டத்தையும் வைத்திருக்கிறது. நேர்த்தியான டிசைன், வலுவான கட்டுமானம், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் கிடைக்கும் இந்த கார் ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேலையில் உள்ள சில குறைபாடுகளால் எடுபடாமல் இருந்து வருகிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

நீண்ட காலமாக குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் இருப்பதும் வாடிக்கையாளர்களிடம் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு புதிய மாடல் அவசியமாகி இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் அண்மையில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. இதே கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. டிசைனில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், அதிக வசதிகளுடன் இந்த கார் இருப்பதால், இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயம் மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் முக்கிய தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் எல்இடி லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பெரிய திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என ஏராளமான சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

மேலும், சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் நாட்ச்பேக் என்ற ரகத்தில் மிகவும் சிறப்பான தோற்ற வசீகரத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கான ஸ்கோடா ரேபிட் கார் ஏஎன்பி என்ற குறியீட்டுப் பெயரில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.MOST READ: ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

புதிய ஸ்கோடா ரேபிட் கார் உருவாக்கும் பணிகள் இந்தியாவிற்கான எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையில் நடந்து வருகின்றன. ஆனால், இந்த கார் இந்தியாவில் அறிமுகமாவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

MOST READ:2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

இது இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் ஸ்கோடா பிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. வரும் 2021ம் ஆண்டு இறுதியில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை கேட்டு சமூக வலைத்தளங்களில் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

MOST READ:சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

புதிய ஸ்கோடா ரேபிட் கார் குறித்து இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றம்

அதற்குள் இந்த டிசைன் பழமையாகிவிடும் என்றும், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை ஸ்கோடா ஆட்டோ கவனத்தில் கொண்டு புதிய ரேபிட் காரை விரைவாக இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அதன் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Source

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா
English summary
Skoda Auto is planning to launch New Gen Rapid in India by end of 2021.
Story first published: Saturday, December 14, 2019, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X