அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

அரபு நாடுகளின் முதுகெலும்பை உடைப்பதற்காக மோடியிடம் ரகசியம் திட்டம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் 20 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி வீசுவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை உள்ளிட்ட இடங்களில், வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்தது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால், பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகம் ஆனதுதான். இந்தியாவில் பொதுவாக பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை குறைவாகதான் இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன், பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில்தான் இந்த விபரீதம் அரங்கேறியது. இந்தியாவில் பெட்ரோலை விட டீசல் மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. இப்படி பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர்.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதன் தாக்கம் சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது. இதில், ஒன்றில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஆனால் அதன்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது. ஆனால் தற்போது இருப்பதும் கூட மிக அதிகமான விலைதான் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இதுபோன்ற பிரச்னைகள் காரணமாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும். இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு இந்தியா செலவிடும் 5 லட்சம் கோடி ரூபாயில், கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும்.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரமும் பாதுகாக்கப்படும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது அதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம். எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஃபேம் இந்தியா (FAME INDIA) என்ற திட்டத்தின் மூலம் கணிசமான தொகை மானியமாக கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பொதுமக்கள் முன்வருவார்கள் எனவும், இதன்மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் மத்திய அரசு கருதுகிறது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஆனாலும் தற்போது வரை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சொல்லிக்கொள்ளும்படி அதிகரிக்கவில்லை. முதலில் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்திருந்தது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஆனால் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இப்படி ஒரு பிரம்மாண்ட இலக்கை எட்ட முடியாது என்பதால், 30 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என தற்போது இலக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது 2030ம் ஆண்டிற்குள் 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற இலக்கு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

பிரதமர் நரேந்திர மோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் புல்லட் ரயில் திட்டங்களை போன்று, இந்த திட்டமும் அவரது கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இந்த சூழலில் வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Society of Manufacturers of Electric Vehicles) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 30 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற இலக்கை எட்ட மத்திய அரசு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை மனதில் வைத்து, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. அத்துடன் மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

2030ம் ஆண்டிற்குள் 30 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற இலக்கை எட்ட விரும்பினால், நிலையான மற்றும் நீண்ட கால கொள்கை தேவை என எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கப்படுவதுடன், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஏற்கனவே குறிப்பிட்டபடி எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டவர். நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாக்கும் என்பதே இதற்கு மிக முக்கியமான காரணம்.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இதுதவிர இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் வேறு இல்லை. இதனால் ஈரான், ஈராக், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

இதன் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்யும் நாடுகள் செல்வ செழிப்பில் திகழ்கின்றன. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவேதான் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது.

அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வேண்டுமானால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தே ஆக வேண்டும். இதற்காக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
SMEV Expects Rs.20,000 Crore Budget Allocation To Achieve 30 Percent EV Target By 2030. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X