எரிபொருள், மின்சாரம் தேவையில்லை.. ஆனால், 725 கிமீ செல்லும்.. அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!

மின்சாரம் மற்றும் எரிபொருள் எதுவுமின்றி சூரிய ஒளியால் இயங்கும் கார் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த அழகுமிக்க சூப்பர் கார்குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

நவீன யுகத்தின் பரிணாமமாக உலகில் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், எலக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக தற்போது, ஓர் புதிய ரக கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் லைட்இயர் நிறுவனம்தான் இந்த அதிசயக்கதக்க மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. லைட்இயர் ஒன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார் சோலார் திறன்மூலம் (சூரிய ஒளி) சக்தியைச் சேகரித்து இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

இதனை அதிசயிக்கதக்க மாடலாக பார்க்க, இந்த சோலார் கார் பல்வேறு திறன்களை உள்ளடக்கியிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், ஒரு முழுமையான சார்ஜில் 725கிமீ தூரம் வரை செல்லும் திறனை இந்த கார் பெற்றிருக்கின்றது.

இதற்கான திறனை சூரிய ஒளியில் இருந்து பெற்றுகொள்ளும் வகையிலான, சோலார் செல்களால் ஆன மேற்கூரை அந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

அவ்வாறு, காரின் மேற்கூரைக்கு வழங்கப்பட்டிருக்கும் சோலார் பிளேட், 5 சதுர அடி பரப்பளவிற்கு போர்த்தப்பட்டுள்ளது. இது, ஒரு மணி நேரத்திற்கு, கார் 12 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு ஏதுவான சார்ஜை சேகரிக்க உதவும். ஆகையால், இந்த கார் எலக்ட்ரிக் சார்ஜிங் முறையில் இயங்கும் கார்களுக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

அதேசமயம், இந்த திறனை சேகரிக்க, காரின் உரிமையாளர் ஒரு நாளைக்கு வெறும் 30 கிமீ தூரம் பயணித்தாலே போதும், அதற்கான சார்ஜை போதுமான அளவில் பயணத்தின்போதே சூரிய ஒளி மூலம் சேகரித்துக் கொள்ளுமாம். மேலும், சூரிய ஒளி அல்லாத குளிர் மற்றும் மழைக் காலங்களில் இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக மின்சார சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

இந்த வசதிமூலம், காரின் உரிமையாளர் காருக்கு தேவையான சார்ஜை எந்தவொரு சார்ஜிங் நிலையித்திலும் ஏற்றிக் கொள்ளலாம். இதனால், காரின் உரிமையாளர் இந்த சோலார் காரை தங்குதடையின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், இயற்கை சீதோஷ்ண நிலையைக் கண்டு அச்சப்படும் சூழலும் இதனால் தவிர்க்கப்பட்டுள்ளது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

இந்த லைட்இயர் ஒன் மாடல் சோலார் காரில் நான்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது, வெறும் பத்து செகண்டிலேயே காரை 0த்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட உதவும். இத்துடன், இந்த காரில் பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், லைட்இயர் ஒன் சோலார் காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. இது ஓடிஏ என்ற எதிர்கால புதுப்பித்தலுக்கு தேவையான அம்சத்தைப் பெற்றிருக்கின்றது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

லைட்இயர் நிறுவனத்தின் இந்த ஒன் மாடல் தற்போது முன்மாதிரியான மாடலிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த காரின் உற்பத்தி மாடலை உலக அறங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, அது விற்பனைக்கு வரும்போது, 1,70,000 என்ற அமெரிக்க டாலர் மதிப்பில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற லைட்இயர் ஒன் மாடலின் அறிமுகத்தின் பேசிய, அந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் லெக்ஸ் ஹோப்ஸ்லூட், "இந்த தருணம் வாகனம் ஓட்டுவதற்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருட கனவு, சிந்தனை மற்றும் கடினமாக உழைப்பு ஆகியவை இந்த மைல்கல்லை எட்ட எங்களுக்கு உதவியுள்ளது. அதேசமயம், மாசற்ற வாகனத்தை அனைவரும் பயன்படுத்த இது வழிவகை செய்யும்" என தெரிவித்தார்.

எரிபொருள், மின்சாரம் தேவையில்லை... ஆனால், 725 கிமீ தூரம் செல்லும்... அதிநவீன திறனுடைய அழகான கார் அறிமுகம்!!

லைட்இயர் நிறுவனம் இதற்கு முன்னதாக ஸ்டெல்லா மற்றும் ஸ்டெல்லா லக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களை சர்வதேச சந்தையில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்நிலையில்தான், அந்த நிறுவனத்தின் மூன்றவாது மாடலாக லைட்இயர் ஒன் என்ற இந்த சோலார் திறன் கொண்ட கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
725 Kilometers On A Single Charge — Here's The Lightyear One. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X