"சன் ஆஃப் எம்எல்ஏ"... பாஜக எம்எல்ஏ -வுக்கு சபாநாயகர் கடிதம்...

காரின் பின்பகுதி கண்ணாடியில் "சன் ஆஃப் எம்எல்ஏ" என எழுதியிருந்த புகைப்படத்தை வெளியிட்டு குற்றம்சாட்டியதற்காக, பாஜக எம்எல்ஏ-விற்கு சபாநாயகர் கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை (Status) வெளிப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதனை, நாம் சமூக வலைதள பக்கம் சென்றாலே காண முடியும். சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வழியில், தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படத்தையோ, வாசகத்தையோ அல்லது வீடியோக்களை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

அந்தவகையில், பலர் காலை எழுந்து பல் விளக்குவது, முதல் இரவு படுக்கையறை செல்வது வரையிலான தகவலை ஸ்டேட்டஸாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவையெல்லாம், நவீன காலத்திற்கு பின்னரே தோன்றியதா? என்றால், இல்லவே இல்லை என்றுதான் நாங்கள் கூறுவோம். ஏனென்றால், முன்னதாகவும் அதாவது வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை வருவதற்கு முன்பிலிருந்தே, இதுபோன்று ஸ்டேட்டஸை வெளிப்படுத்தும் பழக்கம் இந்தியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

அது எப்படி...? என தானே கேட்கிறீர்கள்... நவீன காலக்கட்டத்திற்கு முன்னதாக பலர், தங்களின் வாகனங்களிலின் வாழியாலகே அவர்களது ஸ்டேட்டஸை வெளிப்படுத்து வந்துள்ளனர்.

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அந்தவகையில், ஐ லவ் மை மாம், ஐ லவ் மை டாட், ஐ லவ் இந்தியா, உள்ளிட்ட பல்வேறு வாசங்களை ஸ்டிக்கராக, வாகனங்களில் ஒட்டி அவர்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நடைமுறை, தற்போதும் சிலரால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இளைஞர் ஒருவர், தன்னுடைய நிலைப்பாட்டை, காரின் வாயிலாக வெளிப்படுத்தியதன் காரணமாக, பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தலைநகர் டெல்லி, பாஜக எம்எல்ஏ-வான மன்ஜிந்தர் சிங் சிர்சா, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "தான் ஒரு எம்எல்ஏ-வின் மகன்" என ஒட்டப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காரின் புகைப்படத்தையும், அந்த கார், டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலின் மகனுடையது என்ற குற்றச்சாட்டையும் வைத்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த டெல்லி சட்டபேரவை சபாநாயகர், பாஜக எம்எல்ஏ-வுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வத்துள்ளார். அதில், விதிமீறலில் ஈடுபட்டிருக்கும் கார் தன்னுடையதோ அல்லது தன் மகனுடையதோ அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வீண் பழி சுமத்திய குற்றத்திற்காக, ஏழு நாட்களுக்குள்ளாக மன்னிப்புக் கோரவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தியாவில், வாகனங்களில் ஸ்டிக்கரை ஒட்டுவது என்பது ஓர் பொதுவான விஷயம்தான். இருப்பினும், அதனை பலர் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், அரசு துறையில் பணியாற்றும் பலர் தங்களது துறை, பதவி உள்ளிட்ட தகவலை வெளிப்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, டேல்கேட்டில் கட்டணம், வாகன தணிக்கை உள்ளிட்டவற்றில் விளக்கு பெற இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

அதேசமயம், பொதுமக்களில் சிலரும் இவ்வாறு போலீயான ஸ்டிக்கர்களை முறைகேட்டில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு, முறைகேட்டில் ஈடுபட்ட சிலரை உத்தர பிரதேச மாநில போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களின்மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கரை ஒட்டுவதும், மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும்.

சர்ச்சைக்குரிய வாசகத்துடன் உலா வந்த ரெனால்ட் டஸ்டர் கார்குறித்த, முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த விவகராத்தால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அந்த சர்ச்சைக்குரிய ரெனால்ட் டஸ்டர்குறித்த விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son Of MLA Sticker On Renault Duster. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X