2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள்! விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் 2 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காரை பெற்றுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக விளங்கியவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமா கடந்து இந்திய அளவிலும் ஸ்ரீதேவி கவனம் ஈர்த்தவர். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி மரணமடைந்தார். இது சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூருக்கு எனவும் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கியுள்ளது. மற்ற நடிகர், நடிகைகளை போலவே ஜான்வி கபூரும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்தான். இதனை நிரூபிக்கும் வகையில் புதிய கார் ஒன்றை ஜான்வி கபூர் தற்போது பெற்றுள்ளார்.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

புத்தம் புதிய கருப்பு நிற மெர்சிடிஸ் மேபேக் (Mercedes-Maybach) கார் ஒன்றில் தற்போது ஜான்வி கபூர் பயணித்து வருகிறார். இது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது லக்ஸரி செடான் ரக கார் ஆகும். இது புதிய கார்தான் என்றாலும், ஸ்ரீதேவி பயன்படுத்திய காருக்கும், இதற்கும் இடையே மிகவும் நெருங்கிய தொடர்பு ஒன்று இருப்பதை நம்மால் காண முடிகிறது.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

ஜான்வி கபூரின் புதிய மெர்சிடிஸ் மேபேக் லக்ஸரி கார், MH 02 FG 7666 என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளது. முன்னதாக ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது, வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். இந்த காரில் நடிகை ஸ்ரீதேவி பயணம் செய்ததை நம்மால் பல முறை பார்க்க முடிந்துள்ளது.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

ஸ்ரீதேவி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரின் பதிவு எண் MH 02 DZ 7666 ஆகும். இதே போன்ற பதிவு எண்ணைதான் ஜான்வி கபூரின் புதிய மெர்சிடிஸ் மேபேக் காரின் நம்பர் பிளேட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜான்வி கபூரின் புதிய கார் குறித்த ஒரு விஷயம் தெரியவில்லை.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

ஜான்வி கபூரே இந்த காரை வாங்கினாரா? அல்லது இந்த கார் அவருக்கு பரிசாக கிடைத்ததா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் நடிகை ஜான்வி கபூரின் புதிய மெர்சிடிஸ் மேபேக் காரின் புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு விஷயம் நமக்கு தெரியவருகிறது. பேஸ் எஸ் 560 (S 560) மாடலில்தான் ஜான்வி கபூர் வலம் வந்து கொண்டுள்ளார்.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

இதன் விலை எவ்வளவு தெரியுமா? இந்த காரின் விலை 1.99 கோடி ரூபாய். இதற்கே மலைத்து விடாதீர்கள். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் அதிகமாக இருக்கும். இருந்தபோதும் இதை விட இன்னும் அதிக சக்தி வாய்ந்த எஸ் 650 (S 650) என்ற வேரியண்ட்டும் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.73 கோடி ரூபாய்.

2 கோடி ரூபாய் காரில் வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி மகள்... விலைய விடுங்க... இந்த விஷயம்தான் ஹைலைட்...

இந்த 2 கார்களுக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் இன்ஜின் மட்டும்தான். அதாவது ஜான்வி கபூர் பயணிக்கும் வெர்ஷன் 4.0 லிட்டர் வி8 இன்ஜினை பெற்றுள்ளது. அதே சமயம் இதன் டாப் ஸ்பெக் மாடல் 6.0 லிட்டர் வி12 இன்ஜின் உடன் விற்பனைக்கு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sridevi Daughter Janhvi Kapoor Gets New Mercedes-Maybach. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X