சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

சுஸுகி நிறுவனம், தன்னைத் தானே சார்ஜ் செய்துகொள்ளுகின்ற வகையிலான புதிய பவர்டிரெயினை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

சுஸுகி நிறுவனம், புதிய பவர்டிரெயின் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது, தானாகவே 48V வரை சார்ஜிங் செய்துகொள்ளுகின்ற திறனைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறனை வரும் காலங்களில், புதிதாக அறிமுகப்படுத்த உள்ள பிரபல மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

அதேசமயம், இந்த திறனை ஏற்கனவே கே14டி 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்ஜினில் பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த எஞ்ஜின் சர்வதேச சந்தையில் மட்டுமே தற்போது விற்பனையில் இருக்கின்றது.

புதிய சுஸுகி கே14டி பவர் பிளாண்டானது தற்போது விற்பனையில் இருக்கும் கே14சி யூனிட்டை ரீபிளேஸ் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

இந்த கே14சி எஞ்ஜினைக் கொண்டுதான் எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி உள்ளிட்ட புகழ்வாய்ந்த மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தரம் கொண்ட மாடல்களும் தற்போது சர்வதேச சந்தையில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

கே14சி ரக எஞ்ஜினில் தானாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி காணப்படவில்லை. இதனை, முதல் முறையாக அறிமுகம் செய்யும் விதமாக கே14டி எஞ்ஜினில் மட்டும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இது, 48V வரை தானாக சார்ஜிங் செய்யும் வசதியைக் கொண்டுள்ளது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

இந்த சிறப்பு வசதி தற்போது விற்பனையில் இருக்கும் கே14சி எஞ்ஜினில் இருந்து வெளிவரும் மாசினைவிட 20 சதவீதம் குறைவாகவே வெளிப்படுத்தும்.

இதுமட்டுமின்றி, அதிக டார்க் மற்றும் கூடுதல் மைலேஜ் என அனைத்து வகையிலும் கூடுதல் பலனை அது வழங்கும்.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

அதேசமயம், தற்போதைய எஞ்ஜினைக் காட்டிலும் இந்த புதிய எஞ்ஜின் 15 கிலோ வரை குறைவான எடையைக் கொண்டுள்ளது. இதன்காரணமாக, குறைவான எரிபொருளில் பயன்படத்திக் கொண்டு அதிக திறனை அது வெளிப்படுத்துகின்றது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக 48V திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட உள்ளது. அதில், இன்டெக்ரேட்டர் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் 48V-12V கன்வெர்ட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது, அந்த பெட்ரோல் எஞ்ஜினினுக்கு கூடுதலாக பாட்டம் என்ட் டார்க்கை வெளிப்படுத்த உதவும்.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

அந்தவகையில், 2 ஆயிரம் ஆர்பிஎம்-இல் 235 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். முந்தைய மாடல்களைப் போலவே இந்த அதீத திறன் கொண்ட பேட்டரிகள் முன் இருக்கைக்கு கீழ் பகுதியில் வைக்கப்படும். இந்த புதிய அமைப்பின் கூடுதல் அம்சம் என்னவென்றால், எரிபொருள் இன்றி குறைந்த பட்ச வேகத்தில் 16 கி.மீ வரை வாகனத்தை செலுத்த உதவும். இதுவே, இந்த அம்சத்தின் முக்கிய வசதியாகும். ஆகையால், இது எரிபொருள் பயன்பாட்டை மேலும் குறைக்க உதவுகின்றது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

இந்த புதிய பவர் ட்ரெய்ன் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படலாம். ஆனால், இதன் வருகைகுறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், லேசான ஹைபிரிட் பவர்டிரெயின் கொண்ட கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...!

அந்தவகையில், பலினோவின் 1.2 லிட்டர் பிஎஸ் ட்யூவல்ஜெட் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர், இரட்டை பேட்டரி கொண்ட சியாஸ் ஆகிய மாடல்கள் களமிறக்கப்பட உள்ளன. இத்துடன், எர்டிகா எம்பிவி ரக காரிலும் மைல்டு ஹைபிரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் உள்ளிட்ட கார்களிலும் மைல்டு ஹைபிரிட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Suzuki Introduced New 48V Powertrain For Upcoming Models. Read In Tamil.
Story first published: Monday, December 16, 2019, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X