முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பால், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தமிழகம் தன் பக்கம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக அதிகமான தொகையை செலவிட வேண்டியிருப்பதால், பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

இதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் ஏராளமான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில், மத்திய அரசு தவிர பல்வேறு மாநில அரசுகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். இதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்காவில் இயங்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன்பின்னர் தமிழகம் திரும்பிய கையோடு, தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை-2019 கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது.

MOST READ: யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் மூலமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும் எனவும் தமிழக அரசு எதிர்பார்க்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

MOST READ: அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

இதன்படி தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டூவீலர், கார் மற்றும் பஸ் என்று அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இது பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

MOST READ: பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்... அப்படி என்ன சார் சொன்னீங்க!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

அத்துடன் 2030ம் ஆண்டு வரை, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாநில ஜிஎஸ்டியை 100 சதவீதம் திரும்ப வழங்கவும் இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை வழிவகுத்துள்ளது. தமிழக அரசு இதுபோல் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால், தமிழகத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பொது போக்குவரத்து முறையை மின்சாரமயாக்கும் முயற்சிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 21 ஆயிரம் அரசு பஸ்களுக்கு பதிலாக, ஆண்டுதோறும் 5 சதவீத எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், சென்னையில் சோதனை அடிப்படையில், எலெக்ட்ரிக் பஸ் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை எலெக்ட்ரிக் மயமாக மாற்ற ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற வேகம் போதுமானதாக இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

இவை எல்லாம் தவிர, சென்னை, கோவை, சேலம், நெல்லை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கியமான நகரங்களில், எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகம் செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமானால், அவற்றுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை உயர வேண்டியது அவசியம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு எடுக்கவுள்ளது. இதுதொடர்பாகவும் தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கையில், சில அறிவுறுத்தல் முன் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

அத்துடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எலெக்ட்ரிக் வாகன திட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவுள்ளன. இது முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதால், தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் இதுவும் மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கையில், தனித்துவமான சில அம்சங்கள் இருப்பதாகவும், எனவே இது இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளதாகவும் தமிழக அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு அதிகாரிகள் ஒவ்வொரு படி நிலைகளிலும் ஆட்டோமொபைல் துறையினருடன் விரிவாக ஆலோசனை நடத்தியிருந்தனர். அவர்களது அறிவுரைகளையும் கேட்டறிந்த பின்னர்தான், புதிய மின்சார வாகன கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்

இதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில், இந்திய அளவில் தமிழகம் மிக முக்கியமான மையமாக மாற வாய்ப்புகள் உள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகன ரேஸில் பின்தங்கியிருந்த தமிழகம் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

English summary
Tamil Nadu Electric Vehicle Policy 2019 Seeks To Attract Rs.50,000 Crore Investment, Create 150,000 New Jobs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more