மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

தமிழக அரசு, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக எதிர்கட்சியினர் அவ்வப்போது குற்றம் சாட்டு வைத்து வருகின்றனர். இதனை, உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இந்த விவகாரத்தில், தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்கள் என நாடே மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இதைத்தொடர்ந்தே, தமிழக அரசும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில், பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அது அறிவித்துள்ளது. இதில், பல திட்டங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலே நிலவி வருகின்றன.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

ஆனால், இதில் மாற்றமாக ஒரு சில திட்டங்களுக்கு மட்டும் மக்கள் வரவேற்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், மின் வாகன திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டின் காரணமாக, நாடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றது. முக்கியமாக புவி வெப்ப மயமாதல், காற்று மாசடைதல் போன்ற பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இதற்கு தீர்வு காணும் விதமாக எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, இவற்றிற்கு மாற்றாக மின் வாகனங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

அதற்கான பணிகள்தான் தற்போது சூடிபிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில்கூட, மின்வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் 12 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக 5 சதவீதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இவ்வாறு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் மத்திய, எரிபொருள் வாகனங்களை அடியோடு ஒழித்துகட்டும் வகையிலான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ்குழு சிறப்பு செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு இணங்க தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநிலத்தில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கும் கொள்கை குறித்த தகவலை தமிழக அரசு வெளியட உள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இதுகுறித்து, ஆட்டோ எகானமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில தளத்திற்கு மூத்த அரசு அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக முதலீட்டாளர்கள் மற்றும் மின் உற்பத்தியில் பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் விதமாக இந்த கொள்கை உருவாக்கப்பட உள்ளது. அவ்வாறு, அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி திரும்ப அளித்தல் (Refund), மூலதன மானியம் மற்றும் ஊதியம் அடிப்படையிலான ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை வழங்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

மேலும் பேசிய அவர், "இந்த சலுகை முதல் 3-5 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. முன்னதாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில், முதல் இரண்டு திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ஆனால், மூன்றாவதாக ஓர் புதிய திட்டத்தையும் தமிழக தற்போது அறிவிக்க உள்ளது. இந்த சலுகையை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெற வேண்டுமானால் குறைந்தது ரூ. 500 கோடி முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த கொள்கையில் இடம்பெற உள்ளது" என தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

அதேசமயம், இந்த கொள்கையில் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, மின் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு சலுகை வழங்கப்பட உள்ளது. அந்தவகையில், மின் வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய அதில் பரிந்துரைக்கப்பட உள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

புதிய கொள்கையில் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மூலதன மானியம் பாரம்பரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட சற்று அதிகமாக இருக்கும். மேலும், பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அது இன்னும் கூடுதலாக வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இந்த வரைவுக் கொள்கை தற்போது நிதி துறையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்த இறுதி அறிவிப்பாணையை தமிழக அரசு இம்மாத இறுதிக்குள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

முன்னதாககூட, 1990களில் தமிழக அரசு இதேபோன்று சில சலுகைகளை அறிவித்து, வாகனதுறையை தன் வசம் கவர்ந்து இழுத்தது. அப்போது, வரியில் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்மூலம் ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, டைம்ளர் மற்றும் நிஸ்ஸான் போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. ஆனால், 2017க்கும் பின்னர் ஜிஎஸ்டி வரி மூலம் இதை தலை கீழாக மாறியது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

ஆகையால், தற்போது மின் வாகன திட்டத்திற்காக புதிய கொள்கையை அறிவித்து தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக திட்டம் தீட்டி வருகின்றது.

அதேசமயம், நாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், அதன் கோனா எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tamil Nadu New Electric Vehicle Policy Will Announce Soon. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X