டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காருக்கு அல்ட்ராஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அல்ட்ராஸ் என்பது கடல்பறவையின் பெயர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45எக்ஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த கான்செப்ட் மாடல் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய டாடா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய காரின் பெயரை டாடா மோட்டார்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காருக்கு அல்ட்ராஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அல்பட்ராஸ் என்ற கடல்பறவையின் பெயரை தழுவி அல்ட்ராஸ் பெயரை டாடா மோட்டார்ஸ் சூட்டி இருக்கிறது. நீண்ட தூரம் பறக்கும் வல்லமையை பெற்றது இந்த அல்ட்ராஸ் கடல் பறவை. அதாவது, குறைந்த எரிபொருளில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் திறனை பெற்ற கார் என்பதை குறிக்கும் விதத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ஃபாஆர்க் என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில் புதிய அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் பார்த்த சில டிசைன் அம்சங்கள் இந்த புதிய அல்ட்ராஸ் காரிலும் காண முடியும் என்று தெரிகிறது. இந்த காரில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த காரில் பன்முனை பாதுகாப்பை வழங்குவதற்கான ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற இருக்கின்றன.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த எஞ்சின் திறன் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அல்ட்ராஸ் கடல் பறவைக்கான விளக்கத்தை போன்றே, இந்த கார் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பது உறுதியாக நம்பலாம்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Tata Motors has officially announced the name 'Altroz' for the production-spec 45X premium hatchback. The Tata Altroz will have its global debut at the upcoming Geneva Motor Show, starting from 5th March 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X