டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

அண்மையில் பொது பார்வைக்கு வெளியிடப்பட்ட புதிய டாடா அல்ட்ராஸ் கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலையில் இந்த கார் வர இருப்பதே எதிர்பார்ப்பு எகிறி இருப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்தில் வரும் இந்த காருக்கு ரூ.21,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறுத. இந்த நிலையில், அடுத்த மாதம் 22ந் தேதி புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

இதைத்தொடர்ந்து, தற்போது டெலிவிரி கொடுப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வரும் பிப்ரவரி மாத மத்தியிலிருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா ஜாஸ், டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களு்ககு போட்டியாக வர இருக்கிறது புதிய டாடா அல்ட்ராஸ் கார். வடிவமைப்பில் மிகச் சிறப்பான மாடலாகவும், அதிக தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஹாலஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டர்ன் இன்டிகேட்டர் கொண்ட சைடு மிரர்கள், பனி விளக்குகள் என ஏராளமான சிறப்புகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

டாடா அல்ட்ராஸ் காரில் ஃப்ளோட்டிங் வகை தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், உயர் வகை இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

டாடா அல்ட்ராஸ் காரில் இருக்கும் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கார், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் அறிமுகம் செய்யப்படுவதே தாமதத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

 டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக அமையும் என்று நம்பலாம்.

Via - ACI

Most Read Articles
English summary
According to report, Tata Motors is planning to start Altroz deliveries from february, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X