டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

டாடா அல்ட்ராஸ் கார் படம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றது. படம் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

ஜெனிவா நகரில் இன்று துவங்க இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார், டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல், புதிய மினி எஸ்யூவி மாடல் மற்றும் புதிய மின்சார காரின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்த இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

இந்த சூழலில், ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைக்க இருக்கும் மின்சார காரின் கான்செப்ட் மாடலானது அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

இந்த நிலையில், இன்று அல்ட்ராஸ் அடிப்படையிலான அந்த மின்சார கார் கான்செப்ட்டின் படம் இணையதளம் ஒன்றின் வாயிலாக வெளியாகி இருக்கிறது. இந்த புதிய மின்சார கார் கான்செப்ட் தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

எல்இடி ஹெட்லைட்டுகள், அழகான பம்பர், அலாய் வீல்கள், பின்புறம் உயர்த்தப்பட்ட எடுப்பான புட்டம் என்று பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இது கிட்டத்தட்ட தயாரிப்பு நிலை மாடலுக்கு நெருங்கிய அம்சங்களை கொண்ட மாதிரி மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

இந்த கார் அல்ஃபா என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு கொண்டு வரப்படும் டாடா அல்ட்ராஸ் காரின் டிசைனை இந்த கான்செப்ட் ஒத்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் பெட்ரோல், டீசல் மாடலில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த புதிய மின்சார மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மின்சார கார் மாடல்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பும்போது, இது நிச்சயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க வல்லதாக இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் படம் வெளியானது!

டாடா அல்ட்ராஸ் கார் இந்த ஆண்டிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஆனால், டாடா அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது.

Image Source: MotorBeam

Most Read Articles
English summary
Among the four models, will be the production-spec Tata Altroz and the Altroz EV Concept. Just a few hours ahead of its official unveiling, images of the Tata Altroz EV Concept has been leaked online.
Story first published: Tuesday, March 5, 2019, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X