டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை நிர்ணயம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்?

ஜெனிவாவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை காட்சிப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பேட்டரியில் இயங்கும் அதன் மின்சார கார் மாடலையும் பொது பார்வைக்கு வைத்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்?

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் மின்சார கார் மாடல் ரூ.10 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால், முதல்கட்டமாக அந்த விலை கட்டுப்படியாகாது என்பதால், அதிக விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்?

அதாவது, ரூ.10 லட்சத்திற்கு மேலான பட்ஜெட்டில் இந்த கார் விற்பனைக்கு வருவது தெரிய வந்துள்ளது. ஆட்டோகார்இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரி சைலேஷ் சந்திரா இத்தகவலை தெரிவித்துள்ளார்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்?

அதேநேரத்தில், ஃப்ளோட்டிங் தொடுதிரை சாதனம், சமமான தரை தளம், செயல்திறன் மற்றும் உன்னதமான கேபின் அனுபவம் என டாடா அல்ட்ராஸ் மின்சார கார் மாடல் போட்டியாளர்களிடமிருந்து பல வேறுபட்ட சிறப்புகளை பெற்றிருக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்?

இதனிடையே, டாடா அல்ட்ராஸ் மின்சார காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, குயிக் சார்ஜர் துணையுடன் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றர கார் மாடலாக இருக்கும். எனவே, இந்த கார் போட்டியாளர்களை எளிதாக விஞ்சும் என்று நம்பலாம்.

Source:Autocar India

Most Read Articles
English summary
Tata Motors recently showcased the concept form of its latest EV, based on the Altroz at the Geneva Motor Show 2019. The new Tata Altroz EV price will be offered with a premium price tag; above the Rs 10 lakh range as previously expected.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X