டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனம் வருகிற 19ஆம் தேதி நெக்ஸான் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த வருடத்தில் அல்ட்ராஸ் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனையும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அல்ட்ராஸின் இந்த எலக்ட்ரிக் வெர்சன் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

நெக்ஸான் இவி-க்கு பிறகு ஸிப்ட்ரான் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது காராக இந்த அல்ட்ராஸ் இவி கார் விளங்குகிறது. சோதனை ஓட்டத்தில் முழு மறைப்புடன் ஈடுப்பட்டுள்ளதால் காரின் டிசைனில் எதாவது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக விளங்கும் அல்ட்ராஸ் மாடல், 45எக்ஸ் கான்செப்ட்டில் உருவானது மட்டுமில்லாமல் ஆல்ஃபா கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் காராகவும் விளங்குகிறது. இந்த ஆல்ஃபா கட்டமைப்பில் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள மாடல்கள் அனைத்தும் 4.3 மீட்டர் வரையில் நீளத்தை கொண்டிருக்கும்.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அல்ட்ராஸின் இந்த எலக்ட்ரிக் வெர்சனை ஏற்கனவே டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த அல்ட்ராஸ் இவி காரின் விலை ரூ.10 லட்சத்திற்கு (எக்ஸ்ஷோரூம்) மேல் தான் இருக்கும் என டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் மொபைலிட்டி வணிகம் பிரிவின் இயக்குனர் ஷைலேஷ் சந்த்ரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

அல்ட்ராஸ் இவி மாடலில் வலிமையான என்ஜின் திறன், சமமான அடித்தளத்துடன் வித்தியாசமான கேபின் அமைப்பு மற்றும் சுழலக்கூடிய கன்சோல் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை சிங்கிள் சார்ஜில் சுமார் 250 கிமீ- 300 கிமீ வரையில் இயக்கி செல்லும் வகையில் பேட்டரி தரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 80 சதவீத சார்ஜரை, டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியினால் வெறும் 1 மணிநேரத்தில் அடைந்துவிடும்.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள காரின் நீளம் 3,988 மிமீ-ஆகவும், அகலம் 1,754 மிமீ-ஆகவும், உயரம் 1,505 மிமீ-ஆகவும் மற்றும் வீல்பேஸ் 2,501 மிமீ-ஆகவும் இருக்கும் என இந்த கார் உருவாக்கப்பட்ட கான்செப்டின் அடிப்படையில் கூறப்படுகிறது. இதே பரிமாண அளவுகளில் தான் விற்பனைக்கு வரும் அல்ட்ராஸ் இவி காரும் இருக்கும் என தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்தில் இந்த எலக்ட்ரிக் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் காரின் பின்புறம் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பு அல்ட்ராஸை மாடலை அப்படியே ஒத்து இருப்பது தெளிவாக தெரிகிறது. அல்ட்ராஸ் இவி-ன் ஸிப்ட்ரான் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள நெக்ஸான் மாடலும் சிங்கிள் சார்ஜில் 300 கிமீ அளவுக்கு இயங்கக்கூடிய திறன் வாய்ந்தது.

டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

நெக்ஸான் இவி-ன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.15- ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படவுள்ளது. டாடா நிறுவனம் மட்டுமின்றி மேலும் சில நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் வருங்காலத்தில் அனைவரும் பசுமை வாகனங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Source: Sirish Chandran/Twitter

Most Read Articles
English summary
Tata ALTROZ EV SPIED TESTING FOR THE FIRST TIME IN INDIA
Story first published: Saturday, December 14, 2019, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X