டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

அண்மையில் ஜெய்சால்மரில் நடந்த நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் என்ற புத்தம் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற ஜாம்பவான் மாடல்களுடன் போட்டி போட தயாராக இருக்கும் இந்த கார் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

மேலும், போட்டி கார் மாடல்களை விட இந்த காரில் அதிக சிறப்பம்சங்கள், நவீன டிசைன் அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. இந்த காரை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள், எஞ்சின் விபரங்கள் வெளியாகி விட்ட நிலையில், இந்த காரின் விலை அறிவிப்பு மட்டும் பாக்கி இருந்தது.

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

இந்த நிலையில், வரும் ஜனவரி 22ந் தேதி புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 86 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கின்றன. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானவை. பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் முதலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படும்.

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

வசதிகளை பொறுத்து 9 விதமான வேரியண்ட்டுகளில் இந்த கார் வர இருக்கிறது. இந்த காரில் XE, XE Rhythm, XM, XM Rhythm, XM Style, XT, XT Urban, XZ மற்றும் XZ(O) ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read: முன்பதிவு செய்வது, டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான முன்பதிவு, டீலர் தேர்வு உள்ளிட்டவற்றையும் பெற முடியும்.

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

டாடா அல்ட்ராஸ் கார் 3,990 மிமீ நீளமும், 1,755 மிமீ அகலமும், 1,523 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,501 மிமீ ஆக உள்ளது. பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறப்பான இடவசதியை அளிக்கும் மாடலாக இருக்கும்.

Most Read: பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி, எல்இடி பகல்வேளை விளக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

Most Read: புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்

புதிய டாடா அல்ட்ராஸ் காருக்கு ரூ.21,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. கூகுள் அசிஸ்டென்ட் வசதி மூலமாக இந்த காரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிரவும், அல்ட்ராஸ் காரை முன்பதிவு செய்வது, டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான முன்பதிவு, டீலர் தேர்வு உள்ளிட்டவற்றையும் பெற முடியும்.

Source: Times Now

Most Read Articles

English summary
According to a report, The all new Tata Altroz premium hatchback car to be launched in India on January 22, 2020.
Story first published: Wednesday, December 11, 2019, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X