டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு துவங்கும் தேதி வெளியானது

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

டாடா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார் அல்ட்ராஸ். கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாகவும், ஜெனிவா மோட்டார் ஷோவில் தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

இந்த நிலையில், இறுதிக்கட்ட சாலை சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்று விற்பனைக்கு தயாராக உள்ளது. வரும் டிசம்பர் 3ந் தேதி இந்த கார் பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காருக்கு வரும் 4ந் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ரூ.21,000 முன்பணத்துடன் டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு ஏற்கப்பட உள்ளது. வேரியண்ட் மற்றும் வண்ணத் தேர்வுகள் குறித்த விபரங்கள் அடங்கிய குறிப்பேடுகள் விரைவில் வழங்கப்படும் என்று டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ஃபா கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காம்பேக்ட் செடான், ஹேட்ச்பேக் மற்றும் மினி எஸ்யூவி கார்களை உருவாக்குவதற்கான கட்டமைப்புக் கொள்கையாக இதனை டாடா பயன்படுத்தி வருகிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

இந்த காரில் 84 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும் என்று தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

எல்இடி பகல்நேர விளக்குகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் மியூசிக் சிஸ்டம், ட்வின் ஏர்பேக்ககள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

மராட்டிய மாநிலம், புனே அருகில் பிம்ப்ரியில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் கார் ஆலையில்தான் இந்த புதிய அல்ட்ராஸ் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு தேதி வெளியானது

வரும் ஜனவரியில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Image Source: 4

Most Read Articles
3
English summary
Tata Motors will commence official bookings for all new Altroz premium hatchback on the 3rd of December, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X