Just In
- 4 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 4 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 5 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 7 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது
இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா அல்ட்ராஸ் கார் குறித்து அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பு அல்ட்ராஸ். இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது.

டாடா அல்ட்ராஸ் கார் தற்போது இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. டாடா அல்ட்ராஸ் கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது சமீப காலமாக பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. பெரும் ஆவலை தூண்டியுள்ள அல்ட்ராஸ் கார் சமீபத்தில் நிறைவடைந்த தீபாவளி பண்டிகை சமயத்தில் டாடா ஷோரூம்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. அதற்கும் முன்னதாக 2019ம் ஆண்டின் கோடை காலத்தில் டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதற்கு பிறகு 2019ம் ஆண்டின் பண்டிகை காலத்தில் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என யூகங்கள் கிளம்பின. ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை.

இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில், டாடா அல்ட்ராஸ் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் கார் குறித்த புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா நிறுவனம் ஆரம்பத்தில் பிஎஸ்-4 இன்ஜின்களுடன் மட்டுமே அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின்களுடன் அல்ட்ராஸை களமிறக்க டாடா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் முதல் நாள் முதலே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையான இன்ஜின்களுடன் டாடா அல்ட்ராஸ் கார் கிடைக்கும். இது தொடர்பான திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
MOST READ: ஓட்டுனர் முன்பே எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் கார் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 1.2 லிட்டர் 85 எச்பி 3-சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் 102 எச்பி 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 90 எச்பி 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் டாடா அல்ட்ராஸ் கார் களமிறக்கப்படலாம்.
MOST READ: சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிடவுள்ளது. இதில், டொயோட்டா கிளான்சா மற்றும் மாருதி சுஸுகி பலேனோ உள்ளிட்ட கார்கள் அடக்கம். வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை அதிகரித்துள்ள டாடா அல்ட்ராஸ் காரின் புதிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டாடா அல்ட்ராஸ் கார் 5 முதல் 8 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த விலைக்குள் களமிறக்கும் பட்சத்தில், டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா அல்ட்ராஸ் கார் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

டாடா அல்ட்ராஸ் காரை போலவே, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் கார் அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ளது. இதனால் இதன் இந்திய சாலைக்கான சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் புனேக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த காரின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தின் புகைப்படங்கள் நமது தளத்திற்கு கிடைத்துள்ளன. டாடா நிறுவனத்தின் ஸிப்ட்ரான் தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஸிப்ட்ரான் என்பது எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி, கியர்பாக்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு மின்னணு சாதனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

இந்த நெக்ஸான் காரின் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை எளிதாக பாதிப்பு அடையாத விதத்தில் டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. எனவேதான் இந்த பேட்டரி அமைப்பிற்கு தைரியமாக எட்டு வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

பேட்டரியின் திறனை பார்த்தால், ஒரே சார்ஜில் இந்த பேட்டரி சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை இயக்கும் திறன் உடையது. மேலும் ஸிப்ட்ரான் தொழிற்நுட்பமும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதால், பேட்டரி முழு சார்ஜ் ஆக கூடிய நேரமும் மிக குறைவு. இந்த பேட்டரிக்கு ஆற்றலை வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 300 வோல்ட் திறனில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு துணையாக மேலும் மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அறிமுகப்படுத்தவும் டாடா நிறுவனம் தீவிரமாக திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் கார்களுக்காகவே இந்தியா முழுவதும் 300 வேகமாக சார்ஜிங் செய்யக்கூடிய நிலையங்கள் அடுத்த மாதத்தில் இருந்து அமைக்கப்பட இருக்கின்றன.

தற்சமயம் விற்பனையாகி வரும் நெக்ஸானின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் டிசைன்களில்தான் இந்த எலெக்ட்ரிக் கார்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் க்ரில், பம்பர்ஸ், ஹூட் போன்ற சில வெளிப்புற பாகங்களும், உட்புற பாகங்களும் அப்டேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மோர்ட்போன்களை பயன்படுத்துவதற்காக இணையதள வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது.

இதன் அறிமுகத்திற்காக அடுத்த மாதம் 16 முதல் 19ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வ விலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டு விற்பனை ஆரம்பிக்கப்பட உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களான ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் இவி மாடல்களுக்கு போட்டியாக இந்த டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விளங்கும். இவ்வாறு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருவது பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் படியே.

எம்ஜி எலெக்ட்ரிக் கார் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவலால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெக்டர் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். அத்துடன் இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் காரும் இதுதான். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் எம்ஜி மோட்டார் நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளது. இதே மகிழ்ச்சியுடன் இந்திய மார்க்கெட்டிற்கான தனது இரண்டாவது காரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. ஹெக்டர் காருக்கு அடுத்தபடியாக எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ள கார் இஸட்எஸ் (MG ZS). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விபரங்கள் எதுவும் தற்போதைய நிலையில் வெளியாகவில்லை. என்றாலும் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எம்ஜி இஸட்எஸ் காரில் இடம்பெற்றுள்ள மோட்டார் மற்றும் பேட்டரிதான் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஸட்எஸ் காரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், Synchronous Motor வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் இந்த காரில் 44.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் தாராளமாக 300 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம்.

50 kW DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். அதே நேரத்தில் ஸ்டாண்டர்டு 7 kW சார்ஜரை பயன்படுத்தினால், முழுமையாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் வரை ஆகும். இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே எம்ஜி நிறுவனத்தின் 2வது தயாரிப்பான இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடவுள்ளது.

இந்த சூழலில், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 5ம் தேதி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அப்போது எம்ஜி இஸட்எஸ் கார் குறித்த பல்வேறு விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின் டிசம்பர் மாத இறுதி அல்லது 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன.